கோலாலம்பூரில்
இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்குக்கு 239 பயணிகளுடன் புறபட்டு சென்ற
மலேசிய விமானம் நடுவானில் திடீரென மாயமானது. இச்சம்பவம் நடந்து இன்றுடன் 6
நாட்கள் ஆகிறது. மாயமான விமானத்தை தேடும் பணியில் அமெரிக்கா, இந்தியா,
சீனா, வியட்நாம் உள்பட 12 நாடுகளை சேர்ந்த 42 கப்பல்கள், 39 விமானங்கள்
ஈடுபட்டுள்ளன.
இருந்தும் அது குறித்த தகவல்கள் எதுவும்
கிடைக்கவில்லை. அந்த விமானம் விபத்தில் சிக்கியதா? தீவிரவாதிகளால் கடத்தப்
பட்டதா? அல்லது நாசவேலையால் சிதைக்கப்பட்டதாஎன பல்வேறு கேள்விகள் எழுந்து
உள்ளது.
மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் அமெரிக்காவின் பாதுகாப்பு நிறுவனமான பென்டகனும் ஈடுபட்டு உள்ளது.
இந்த விமானம் ராடார்களின் பார்வையில் இருந்து
மறைந்த பின்னர் பல மணி நேரங்கள் செய்கோள் ஒன்றுக்கு தகவல்களை
அனுப்பிக்கொண்டிருந்திருக்கலாம் என்று சில அமெரிக்க ஊடகங்கள்
தெரிவித்திருந்தன.
ஆனால் புதிதாக குறிப்பிடத்தக்க துப்பு எதுவும்
கிடைக்கவில்லை, புதிய கோணத்தில் விசாரணை நடக்கிறது அவ்வளவுதான் என்று
வெள்ளை மாளிகை செய்தி தொடரபாலர் ஜே கார்னி தெரிவித்தார்.
சின்குவா அறிக்கை சீன அரசு செய்தி நிறுவனம்
இன்று ஒரு சீன நிலநடுக்க இயல் மற்றும் ஆராய்ச்சி குழு கடந்த சனிக்கிழமை
காலை 5 உள்ளூர் நேரத்தில் மலேஷியா மற்றும் வியட்நாம் இடையே கடல் ஒரு
"பூகம்பம் அலை" கண்டறியப்பட்டது என்று. கூறியது
அமெரிக்கக் கடற்படைக் கப்பலான யுஎஸ் எஸ் கிட்
தாய்லாந்து வளைகுடாவிலிருந்து மலேசியாவின் மேற்குக் கடற்கரைக்கு விரைகிறது
என்று அமெரிக்க கடற்படை அறிவித்திருக்கிறது.
மாயமான மலேசிய விமானம் இந்திய பெருங்கடலின் கீழ் இருக்க வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தகவல் வெளியிட்டு உள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...