Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கல்வி நிலையங்களின் மீது அதிக தாக்குதல்கள் - உலக பட்டியலில் இடம்பெற்ற இந்தியா

                 உலகில், பள்ளிக்கூடங்களை வன்முறைக்கு அதிகளவில் பலிகொடுக்கும் 30 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. கடந்த 2009 - 2012ம் ஆண்டுகளுக்கு இடைபட்ட காலம்வரை, இந்தியாவில் 140 பள்ள்ளிகள் வன்முறை தாக்குதல்களுக்கு இலக்காகி உள்ளன. இதன்மூலம், ஆசிரியர்களும், மாணவர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
               மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், கல்வி trade union உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோருக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்த உலகளாவிய அளவில் மேற்கொள்ளப்பட்ட "Education Under Attack 2014" என்ற ஆய்வு, சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக மொத்தம் 30 நாடுகள் 3 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை, * மேற்கண்ட 4 ஆண்டுகள் காலகட்டத்தில், 1,000 மற்றும் அதற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் கல்வி புலங்களின் மீது தாக்குதல் நடைபெற்ற நாடுகள், "மிகவும் மோசமான வகையில் பாதிக்கப்பட்டவை". * 500 முதல் 999 வரையிலான எண்ணிக்கையில் தாக்குதல் நடைபெற்ற நாடுகள் "மோசமான வகையில் பாதிக்கப்பட்டவை". * 500க்கும் குறைவான எண்ணிக்கையில் தாக்குதல் நடைபெற்ற நாடுகள் "பாதிக்கப்பட்டவை". நமது இந்தியா, இந்த வகையில் 3வது வகைப்பாட்டின் கீழ் வருகிறது. இந்த வகைப்பாட்டில், தாய்லாந்து, மியான்மர், இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற இதர ஆசிய நாடுகளும் வருகின்றன. அதேசமயம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் "மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டவை" என்ற பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை, ஜார்க்கண்ட், பீகார், ஒடிசா மற்றும் சத்தீஷ்கர் போன்ற மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த மாநிலங்களிலேயே, கல்விப் புலங்களின் மீது அதிகளவில் தாக்குதல்கள் நடக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive