தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு
வந்துள்ளதால், சென்னை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளிக்க தடை
விதிக்கப்பட்டுள்ளது. இதனால், நேற்று அங்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன்
திரும்பி சென்றனர். நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால்,
தமிழக தேர்தல் ஆணையம் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.
மாவட்ட தேர்தல்
அதிகாரிகளாக, அந்தந்த மாவட்ட ஆட்சியர் களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை மாநகராட்சி இருப்பதால், மாநகராட்சி ஆணையர் தான்
மாவட்ட தேர்தல் அலுவலராக செயல்படு வார். இதனால் சென்னை கலெக்டருக்கு
தேர்தல் பணிகள் பெரிய அளவில் இருக்காது. இருப்பினும், மாவட்ட தேர்தல்
அலுவலருடன் இணைந்து, அவரும் தேர்தல் பணி செய்ய வேண்டியிருக்கும். தேர்தல்
பணி மற்றும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் போன்ற காரணங்களால், மாவட்ட
ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, வாக்கு
எண்ணிக்கை நடைபெறும் நாள் வரை எவ்வித இலவச திட்டப் பணிகளையும் செயல்படுத்த
முடியாது.
தற்போது நாடாளுமன்ற தேர்தல் தேதி
அறிவிக்கப்பட்டு விட்டதால், தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள்
அமலுக்கு வந்துள்ளது. இதனால் சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து
கலெக்டர் அலுவலகத்திலும், பொதுமக்கள் மனு அளிப்பதற்கு தற்காலிக தடை
விதிக்கப்பட்டுள்ளது. இதை அறியாத பொதுமக்கள் வழக்கம்போல் நேற்றும் சென்னை
கலெக்டர் அலுவலகத் துக்கு மனு அளிக்க வந்திருந்தனர். நேற்று 100க்கும்
மேற்பட்ட பொதுமக்கள் இங்கு வந்தனர். மனு வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளதால்,
அதிகாரிகள் அவர்களிடம் இன்றைக்கு மனுக்கள் வாங்கப்படமாட்டாது என்று கூறி
அவர்களை திருப்பி அனுப்பினார்கள். இதனால், ஏமாற்றத்துடன் திரும்பிய
மக்களுக்கு ஆதரவாக, கலெக்டர் அலுவலகத்தின் வாயிலில் புகார் பெட்டி ஒன்று
வைக்கப்ட்டிருந்தது. கலெக்டரிடம் மனு அளிக்க வந்த பொதுமக்கள் அனை வரும்,
வெளியே வைக்கப்பட்டிருந்த புகார் பெட்டியில் தங்கள் மனுக்களை போட்டுவிட்டு
சென்றனர். கலெக்டரை நேரில் சந்தித்து தங்கள் குறைகளை தெரிவிக்க
வந்ததாகவும், அதற்கு அனுமதி அளிக்காதது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது எனவும்
பொதுமக்கள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...