இயந்திர
சாதனம் ஒவ்வொன்றுக்கும் வரலாறு உண்டு. ஏ.டி.எம். (Automatic Teller
Machine) உருவான கதை கூட சுவாரஷ்யமானது. ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த ஜோன்
ஷெப்பர்ட் பேரோன் தன் மனைவிக்குப் பரிசளிக்க விரும்பி பணத்தை எடுக்க
வங்கியில் வரிசையில் நின்றார். தனது முறை வந்த போது பணத்தைக் கொடுக்க
வேண்டிய காசாளர், நேரம் முடிந்து விட்டது என்று கவுன்டரை பூட்டி விட்டுச்
சென்றுவிட்டார்.
ஜோன் வெறுங்கையோடு மனைவியைப் பார்க்க
விரும்பவில்லை. கையில் இருந்த சொற்ப சில்லறையை வைத்து, கொஞ்சம்
சாக்லெட்டுகளை வாங்கிக் கொடுத்து மனைவியை சமாதானப்படுத்தலாம் என்று
நினைத்து சாக்லேட் வெண்டிங் இயந்திரத்தைத் தேடிச் சென்றார். அப்போதைக்கு
அவர் மனைவியை சமாதானப்படுத்தினாலும், பூட்டிய வங்கிக் கவுண்டரும், காசு
போட்டால் உதிர்ந்த சாக்லேட்களும் அவர் மனதில்
மீண்டும் மீண்டும் வந்து போயின.
அதன் விளைவுதான் முதல் ஏ.டி.எம். உருவாக
வித்திட்டது. 1969இல் இவர் உருவாக்கிய முதல் ஏ.டி.எம். வடக்கு லண்டனின்
பார்க்லேஸ் வங்கியில் வைக்கப்பட்டது. அதிலும் ஒரு சிக்கல். ஜோனின்
மனைவியால் அப்போதைய ஏ.டி.எம். அட்டைக்கான ஆறு இலக்க குறியீட்டை(Pin Number)
ஞாபகம் வைத்துக் கொள்ள முடியவில்லை. உடனே செயலில் இறங்கிய ஜோன், அதை நான்கு இலக்கங்களாகக் குறைத்தார்.
ஏ.டி.எம். தற்போது ஏராளமான மாற்றங்களைக் கண்டு விட்டாலும், அதற்கெல்லாம் அடிப்படையாக இருந்தது ஜோனின் காதல்தான்!
செய்தி பகிர்வு : பா. சத்தியவேல், ப.ஆ
Nice Mr. Sathyavel. Good information. Thank u very much sir.
ReplyDelete