ஐ.ஏ.எஸ். நேர்முகத் தேர்வு ஏப்ரல் 9-ம் தேதி தொடங்குகிறது. முதல்கட்டமாக 1,281 பேர் அடங்கிய பட்டியலை யூ.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது.
ஏப்ரல் 9 முதல் நேர்காணல்
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்டது. தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் 12 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.சுமார் 1,000 காலியிடங் களுக்காக நடத்தப்பட்ட இந்த தேர்வின் முடிவு கடந்த11-ம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வில் 3003 பேர் தேர்ச்சி அடைந் தனர். தமிழகத்தில் இருந்து ஏறத் தாழ 300 பேர் வெற்றிபெற்றனர். நேர்முகத் தேர்வு ஏப்ரல் 9-ம் தேதி தொடங்குகிறது.
முதல்கட்ட பட்டியல் வெளியீடு
இந்த நிலையில், நேர்முகத் தேர்வுக்கான முதல்கட்ட பட்டியலை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி.) இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் 1,281 பேர் இடம்பெற்றிருக்கிறார்கள்.பதிவு எண், நேர்முகத் தேர்வு தேதி, நேரம், பெயர் ஆகிய விவரங்களை இந்த பட்டியலில் தெரிந்துகொள்ளலாம். இதர விண்ணப்பதாரர்களுக்கான நேர்முகத் தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று யூ.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...