சி.பி.எஸ்.இ. நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை நாடு முழுவதும் 8 லட்சம் பேர் ஞாயிற்றுக்கிழமை எழுதினர். இத்தேர்வு முடிவுகள் மார்ச் 21-ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.
1 முதல் 5-ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் இடைநிலை ஆசிரியர்கள் முதல்
தாளையும், 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள்
இரண்டாம் தாளையும் எழுத வேண்டும்.
இத்தேர்வில் தேர்ச்சி பெற 150-க்கு 90 மதிப்பெண் எடுக்க வேண்டும். தேர்வில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரும் விதத்தில் தேர்வர்களின் ஓ.எம்.ஆர். விடைத்தாள்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். தேர்வர்கள் மொழிப் பாடங்கள், கணிதம், அறிவியல் அல்லது சமூக அறிவியல் இவற்றில் தேர்வு எழுதிய பாடங்களின் விவரங்களில் பிழைகள் இருந்தால் திருத்திக்கொள்ள திங்கள்கிழமை மாலைக்குள் (மார்ச் 17) சி.பி.எஸ்.இ. அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லலாம்.இத்தேர்வுக்கான சரியான விடைகளும் சி.பி.எஸ்.இ. இணையதளத்தில் வெளியிடப்படும். அதில் ஏதேனும் ஆட்சேபணை இருந்தால் மார்ச் 19-ஆம் தேதிக்குள் சி.பி.எஸ்.இ. அமைப்பிடம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய இ.மெயில் முகவரி: ctet@cbse.gov.in

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...