லோக்சபா தேர்தலின்போது, பதட்டமான
ஓட்டுச்சாவடிகளில், வெப்-?கமரா இயக்கும் பணிக்காக, இன்ஜி., கல்லூரி
மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவர்களுக்கு, 700 ரூபாய் சிறப்பு
ஊதியம் வழங்கவும், தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
லோக்சபா தொகுதிவாரியாக, ஓட்டுச்சாவடிகளின்
எண்ணிக்கையில், 3ல்1பங்கு, பதட்டமானவை என அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு,
வெப்-?கமரா பொருத்தி, ஓட்டுப்பதிவை கண்காணிக்க, தேர்தல் கமிஷன்
திட்டமிட்டுள்ளது. இதை இயக்க, இன்ஜி.,கல்லூரி மாணவர்களை தேர்வு
செய்யும்படி, அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல்பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில்,
"பதட்டமான ஓட்டுச்சாவடிகளில், பொருத்தப்படும் வெப்-கேமராக்களை இயக்க,
இன்ஜி., கல்லூரி மாணவர்களை பயன்படுத்த, தேர்தல் கமிஷன் அனுமதி வழங்கி
உள்ளது. அவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டு, அப்பணிக்காக,தேர்தல் நாளன்று,
700 ரூபாய் சிறப்பு ஊதியம் வழங்கப்பட உள்ளது. இப்பணியில் ஈடுபட விரும்பும்,
ஐ.டி., கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட, பல்வேறு பாடப்பிரிவுகளில்
படிக்கும் மாணவர்கள் குறித்த, பெயர் பட்டியல்களை விரைந்து அனுப்பும்படி,
கல்லூரி நிர்வாகங்களுக்கு, தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு தொகுதி
தேர்தல் அதிகாரிகள் ஒப்புதல் தருவர். அதன்படி அப்பட்டியல், தேர்தல்
கமிஷனுக்கும் அனுப்பப்படும்,”என்றார்.
sir one doubt........inta work anta engg student area la kidaikuma or other Dt ?
ReplyDeleteBcoz Apr 24 anta student vote podanum na , 1ly avanga area la than podalam............
Postal Vote apply seythu, Vote Podalam! antha district-la enga vendumnalum duty poduvaanga.
ReplyDelete