ஓட்டுப்பதிவு நேரம் அதிகரிப்பு குறித்து, தலைமை
தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாவது: தேர்தலின்போது, வெயில் கடுமையாக
இருக்கும் என, கருதப்படுவதாலும், மற்ற காரணங்களாலும், ஓட்டுப்பதிவு நேரம்,
வழக்கமான நேரத்தை விட, இரண்டு மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, காலை, 7:00 மணி
முதல், மாலை, 6:00 மணி வரை, வாக்காளர்கள் ஓட்டளிக்கலாம். எனினும்,
வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் நக்சல் ஆதிக்கம் உள்ள தொகுதிகளில்,
ஓட்டுப்பதிவு நேரத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இவ்வாறு தேர்தல்
கமிஷன் அறிவித்துள்ளது. இதுவரை, வாக்காளர்கள், காலை, 8:00 முதல், மாலை,
5:00 மணி வரை மட்டுமே ஓட்டளிக்க அனுமதிக்கப்பட்டனர் என்பது
குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...