மத்திய மந்திரிசபை கூட்டம்
பிரதமர் மன்மோகன்சிங்
தலைமையில் நேற்று
நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள்
எடுக்கப்பட்டன. மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்குவது
என்று மந்திரிசபை
கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதனால் மத்திய
அரசு ஊழியர்கள்
பெறும் அகவிலைப்படி
90 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்ந்துள்ளது.
80 லட்சம் பேர்
இதன் மூலம் 50 லட்சம்
மத்திய அரசு
ஊழியர்களும், 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் ஆக மொத்தம்
80 லட்சம் பேர்
பயன் பெறுவார்கள்.இந்த அகவிலைப்படி
உயர்வு, கடந்த
ஜனவரி 1–ந்
தேதி முதல்
முன்தேதியிட்டு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
7–வது சம்பள கமிஷனின்
யோசனைப்படி, அகவிலைப்படியில் 50 சதவீதத்தை
ஊழியர்களின் அடிப்படை சம்பளத்துடன் இணைக்கவும் மந்திரிசபை
ஒப்புதல் அளித்து
இருக்கிறது. இதனால் மத்திய அரசு ஊழியர்களின்
மொத்த சம்பளம்
சுமார் 30 சதவீதம்
உயரும்.
கடந்த ஆண்டு செப்டம்பர்
மாதம் மத்திய
அரசு ஊழியர்களுக்கான
அகவிலைப்படி 10 சதவீதம் உயர்த்தப்பட்டு 90 சதவீதம் ஆனது.
அந்த உயர்வு
முன்தேதியிட்டு 2013–ம் ஆண்டு
ஜூலை 1–ந்
தேதி முதல்
அமலுக்கு வந்தது.
இப்போது அகவிலைப்படி
மீண்டும் உயர்த்தப்பட்டு
100 சதவீதம் ஆகி இருக்கிறது.
நல்லது நடக்கும்
ReplyDeletecongrats
ReplyDelete