திட்டமிட்டபடி வியாழனன்று (மார்ச் 6) வேலை
நிறுத்தம் நடைபெறும் என்று தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின்
கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜாக்) அறிவித்துள்ளது.
இதுகுறித்து டிட்டோஜாக் சார்பில் வெளியிட்ட
அறிக்கையில் கூறியிருப்பதாவது:06.03.2014 அன்று ஒருநாள் வேலைநிறுத்தம்
நடத்துவது என முடிவு எடுத்து அறிவித்துள்ளோம். இந்நிலையில் புதனன்று
(மார்ச் 5) இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நாடாளுமன்றத் தேர்தல் தேதி
அறிவித்துள்ளது. அரசு அலுவலர்களும் மற்றும் சில ஆசிரியர் விரோத சக்திகளும்
06.03.2014 அன்று நடைபெறும் ஒருநாள் வேலைநிறுத்தம் தேர்தல் ஆணையத்தால்
முடக்கப்படும் என்று திட்டமிட்டு வதந்தி பரப்பி வருகின்றனர்.
தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின்
கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜாக்) வில் இணைந்துள்ள 6 சங்கங்களான
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி,
தமிழக ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழக
ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி
ஆசிரியர் சங்கங்களின் உறுப்பினர்கள் அனைவரும் இவ்வதந்தியை நம்ப வேண்டாம்.
நம்முடைய உருக்கு போன்ற ஒற்றுமையை
வெளிப்படுத்துவதன் மூலம் ஒன்றுபட்டபோராட்டத்தினை நடத்துவதின் மூலம் மட்டுமே
மத்திய அரசுக்கு இணையான இடைநிலை ஆசிரியர் ஊதியம் உள்ளிட்ட 7
அம்சக்கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும்.ஆகவே வதந்திகளை நம்ப வேண்டாம்
திட்டமிட்டவாறு 06.03.2014 அன்று ஒருநாள் வேலைநிறுத்தம் வெற்றிகரமாக்க
டிட்டோஜாக் சங்கங்கள் சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அதில்
கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...