Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தேர்தல் பயிற்சியில் பங்கேற்காத 600 பேருக்கு நோட்டீஸ்.

 
           காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் பணி தொடர்பாக ஆணை பெற்று,தேர்தல் பயிற்சியில் பங்கேற்காத600பேருக்கு மாவட்ட தேர்தல் பிரிவுவிளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 
           மக்களவைத் தேர்தலுக்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில்1104இடங்களில்3452வாக்குச் சாவடி கள் அமைக்கப்பட உள்ளன. இப்பணிகளில்18,500ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதற் கான பணி ஆணை ஊழியர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில் தேர்தல் பணி தொடர்பாக ஆணை பெற்றவர் களுக்கு மாவட்டம் முழுவதும் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் சுமார்600-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கவில்லை. பயிற்சியில் பங்கேற்காதது குறித்து விளக்கம் கேட்டு,அவர்களுக்கு மாவட்ட தேர்தல் பிரிவு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

                 பங்கேற்க முடியாதவர்கள் மனு அளிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து தேர்தல் பணி தொடர்பாக ஆணை பெற்றவர்கள் தங்களது தேர்தல் பணி ரத்து,மாற்றல் தொடர்பாக அனைத்து மனுக்களையும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கா.பாஸ்கரன் அல்லது சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (விமான நிலைய விரிவாக்கத் திட்டம்) ரவீந்திரநாத் ஆகியோரிடம் மட்டும் நேரில் சந்தித்து அளிக்க வேண்டும் என்ற தகவலை தேர்தல் பிரிவு,அதன் தகவல் பலகையில் ஒட்டியுள்ளது.இது குறித்து தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தேர்தல் பணியை தவிர்ப்பதற்காக சிலர் பொய்யான காரணங்களை கூறி,பணியை நிராகரிக்கிறார்கள். கடந்த மக்களவைத் தேர்தலில் காஞ்சிபுரம் மாவட்டத்தில்14ஆயிரம் ஊழியர்களைக் கொண்டு தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தேர்தலில்18500பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்தல் பணிக்கு அதிக அளவில் ஊழியர்கள் தேவைப்படும் நிலையில்,பலர் தங்கள் தேர்தல் பணியை ரத்து செய்ய வேண்டும் என்று கோருகின்றனர்.

              தேர்தல் பணியை ரத்து செய்யக்கோரி வரும் மனுக்களை பரிசீலனை செய்து,தவிர்க்க முடியாத காரணங்கள் மட்டும் ஏற்கப்பட்டு,மற்ற மனுக்கள் நிராகரிக்கப்பட வேண்டும் என்று ஆட்சியர் பாஸ்கரன் கண்டிப்பாக தெரிவித்துவிட்டார் என்றார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive