தமிழகம் உட்பட, நாடு முழுவதும் உள்ள, மத்திய
பல்கலைகளில், 5,707 பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக
உள்ளன. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழுள்ள, மத்திய உயர்கல்வித்
துறையின் கட்டுப்பாட்டில், நாடு முழுவதும், 42 மத்திய பல்கலைக்கழகங்கள்
இயங்கி வருகின்றன. தமிழகத்தில், கடந்த, தி.மு.க., ஆட்சியில், திருவாரூரில்
மத்திய பல்கலை துவக்கப்பட்டது.
மேலும், சென்னை அருகில் உள்ள, கடல் சார்
பல்கலையும், மத்திய பல்கலை வரிசையில் இணைந்தது. மத்திய பல்கலைகள்,
மாநிலங்களின் பல்கலைகள், நிகர்நிலை மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள்
வரிசையில் இல்லாமல், தனித்துவம் பெற்றவையாக திகழ்கின்றன. கடந்த, ஜனவரி மாத
நிலவரப்படி, நாடு முழுவதும் உள்ள, 42 பல்கலைகளில், திருவாரூர் மத்திய
பல்கலை உட்பட, 39 பல்கலைகளில், பேராசிரியர், இணை மற்றும் உதவி
பேராசிரியர்கள் என, 5,707 பணியிடங்கள் காலியாக இருப்பதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், தமிழகத்தின், திருவாரூர் மத்திய
பல்கலையில், நிர்ணயிக்கப்பட்ட, 151 பணியிடங்களில், இரண்டு பேராசிரியர்கள்,
ஐந்து இணை பேராசிரியர்கள், 21 துணை பேராசிரியர்கள் என, 28 பேர் மட்டுமே
பணியில் உள்ளனர். மேலும், 20 பேராசிரியர்கள், 38 இணை மற்றும் 65 உதவி
பேராசிரியர்கள் என, 123 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில், சமீபத்தில், 77
பணியிடங்களுக்கு, தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக, டில்லி பல்கலையில், 953 பணி இடங்கள்,
காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...