Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர் தகுதி தேர்வு: 5% மதிப்பெண்கள் தளர்வில் தேர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு இன்று சான்று சரிபார்ப்பு


            ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17 மற்றும் 18ம் தேதிகளில் நடந்தது. அதில் சுமார் 6 லட்சம் பேர் எழுதினர். சுமார் 20 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் இட ஒதுக்கீட்டு பிரிவினர் 55 சதவீத மதிப்பெண்கள் எடுத்தால் போதும் என்று அரசு அறிவித்தது.
 
             இதையடுத்து கடந்த 6ம் தேதி 150க்கு 82 மதிப்பெண்கள் (55 சதவீதம்) எடுத்தால் போதும். இதன்படி தகுதி தேர்வில் இரண்டு தாள்களிலும் 48 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கு இன்று சான்று சரிபார்ப்பு நடக்கிறது. முதல்கட்டமாக தாள் 1ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 3 மாவட்டங்களுக்கு ஒரு மையம் அமைக்கப்பட்டு சான்று சரிபார்ப்பு நடக்கிறது.  தாள் 2க்குரிய சான்று சரிபார்ப்பு பிறகு நடக்கும்.

                தேர்வு எழுதியோர் தங்கள் பதிவெண்ணை குறிப்பிட்டு அழைப்புக் கடிதத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வில் ஏற்கனவே தகுதி பெற்று 21.1.14 முதல் 26.1.14 வரை நடந்த சான்று சரிபார்ப்பில் கலந்துகொள்ள இயலாதவர்களுக்கும், சான்றுகளை சமர்ப்பிக்க தவறியவர்களுக்கும் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு குரோம்பேட்டையில் உள்ள செயின்ட் ஜோசப் பள்ளியில் இன்று சான்று சரிபார்ப்பு நடக்கிறது.




2 Comments:

  1. Tet 2012 5% relaxation Expect for a good judgement today . ALL THE BEST cell 9842366268

    ReplyDelete
  2. tet 2 maths cal me 9042811002

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive