Home »
» 44 விடுதிகள் அமைக்க முடிவு
அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில், 13 மாவட்டங்களில், 105 கோடி
ரூபாய் மதிப்பீட்டில், 44 மாணவியர் விடுதிகள் அமைக்கப்படுகின்றன. கல்வியில்
பின்தங்கிய மாவட்டங்களில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவி பெறும்
பள்ளிகளில், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில், கல்வித் திறனை
வளர்த்தல்;
இடைநிற்றலை தவிர்த்தல்; தேர்ச்சி விகிதத்தை
அதிகரித்தல்; கூடுதல் வகுப்பறைகளை கட்டுதல் போன்ற பணிகள்
மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில், 13 மாவட்டங்களில், 44 இடங்களில்,
மாணவியர் விடுதிகள் அமைக்க, பொதுப்பணித் துறை முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, 105 கோடி ரூபாய், ஒதுக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...