மூன்றாம் பருவ தேர்வுகள், ஏப்ரல் மாத துவக்கத்தில் ஆரம்பிக்கிறது. அரசு, அரசு நிதியுதவி, சுய நிதி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில்,
ஆறாம் வகுப்பு முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர், மூன்றாம் பருவ தேர்வுகள் (முழு ஆண்டு)
ஆண்டுதோறும், ஏப்ரல் மாதம், 15ம் தேதி வாக்கில் துவங்கி, மாத கடைசி வரை
நடைபெறும்.
இந்தாண்டு, லோக்சபா தேர்தல் அறிவிப்பு காரணமாக, முன் கூட்டியே நடத்தி முடிக்க, பள்ளி கல்வி துறை முடிவு செய்தது. முதலில், ஏப்ரல், 21ம் தேதியுடன் தேர்வுகளை நடத்தி முடிக்க
எண்ணி இருந்தது. ஆனால், பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருந்ததால்,
முன் கூட்டியே தேர்வுகளை நடத்தி முடிக்க,
திட்டமிட்டு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் மட்டுமின்றி,
மாநிலம் முழுவதும் ஏப்ரல், மூன்றாம் தேதி தேர்வுகள் துவங்கி, 16ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. ஆறாவது முதல் எட்டாம் வகுப்பு
வரையிலான மாணவ, மாணவியருக்கு காலை, பத்து முதல், 12.30 மணி வரை தேர்வுகள் நடக்கிறது.
மூன்றாம் தேதி காலை, தமிழ், எட்டாம் தேதி ஆங்கிலம், பத்தாம் தேதி
கணிதம், 11ம் தேதி விளையாட்டு, 15ம் தேதி அறிவியல், 16ம் தேதி சமூக அறிவியல் தேர்வு
நடக்கிறது. இதே போல், ஒன்பதாம் வகுப்புக்கு தினமும் மதியம்,
இரண்டு முதல் மாலை, 4.30 மணி வரை தேர்வு நடக்கிறது.
மூன்றாம் தேதி, தமிழ் முதல் தாள், எட்டாம் தேதி தமிழ் இரண்டாம் தாள்,
ஒன்பதாம் தேதி ஆங்கிலம் முதல் தாள், பத்தாம் தேதி ஆங்கிலம் இரண்டாம் தாள், 11ம் தேதி கணிதம், 12ம் தேதி விளையாட்டு, 15ம் தேதி அறிவியல், 16ம் தேதி சமூக அறிவியல் பாட தேர்வு
நடக்க உள்ளது.
இதில், ஒன்பதாம் வகுப்பு செய்முறை தேர்வுகளை வரும், 25ம் தேதிக்குள், அனைத்து கல்வி நிறுவனங்களும் முடித்து
கொள்ள வேண்டும். இதனை முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்,
என்று பள்ளி கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் கூறியதாவது: ஆறு முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கான தேர்வுகள் அடுத்த, மாதம் மூன்றாம் தேதி துவங்கி, 16ம் தேதி வரை நடக்கிறது. தினமும் காலை, மாலை என, இரு வேளைகளில் தேர்வுகள் நடத்தி முடிக்கப்படும்.தேர்வு நடத்தி முடிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. ஒன்பதாம் வகுப்புக்கு செய்முறை தேர்வுகளை விரைந்து முடிக்க, அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது, என்றார்.மேலும், சில கல்வி நிறுவனங்கள் கூறுகையில், ப்ரி கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு, மார்ச், 28, 29ம் தேதிக்குள் தேர்வு வைத்து, விடுமுறை வழங்கும் வகையில், தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, என்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...