தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலையில், பி.சி.ஏ.,
பட்டம் படிக்க விண்ணப்பித்தவருக்கு, 2 ஆண்டுகளுக்கு பின் தேர்வு
எழுதுவதற்கான 'ஹால்டிக்கெட்' வந்தது.
மதுரை தவிட்டுச்சந்தையை சேர்ந்த சந்திரமோகன்
மகன் தினகர். இவர், 21.1.2012ல், தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலை மதுரை
மையத்தில், பி.சி.ஏ., படிப்பிற்கு விண்ணப்பித்தார். அதற்கான கட்டணம்
செலுத்தி, ரசீது பெற்றார்.
ஆனால், மையத்தில் இருந்து அடையாள அட்டை மற்றும்
பாடப் புத்தகங்கள் வரவில்லை. மாணவரின் தந்தை சென்னை மையத்திற்கு,
நினைவூட்டல் கடிதம் எழுதினார். அதற்கு, 'மதுரை கல்வி மையத்தில் இருந்து
தங்கள் மகனின் பி.பி.பி., அல்லது பி.சி.ஏ., படிக்க விண்ணப்பம் வரவில்லை,'
என, 18.4.2013ல் பதில் வந்தது.
ஆனால், அந்த மாணவருக்கு, இரண்டு நாட்களுக்கு
முன் 'ஹால்டிக்கெட்' வந்தது. அதில், '23.3.2014ல் பி.பி.பி., எழுதலாம்,' என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர் தந்தை சந்திரமோகன் கூறுகையில்,
"படிப்பிற்கான கட்டணம் செலுத்தி 2 ஆண்டுகளுக்கு பின் ஹால்டிக்கெட்
வந்துள்ளது. மையத்தில் இருந்து பாடப்புத்தகங்களும் அனுப்பவில்லை," என்றார்.
கல்வி மைய நிர்வாக அலுவலர் ராமு கூறுகையில்,
"உரிய நேரத்தில் தொடர்பு கொண்டோம். விண்ணப்பதாரரிடமிருந்த எவ்வித தகவலும்
பெறமுடியவில்லை. பிளஸ் 2 முடிக்காமல் நேரடியாக பி.சி.ஏ., எழுத முடியாது.
அதற்கு முன் பி.பி.பி., தேர்வு எழுத வேண்டும். அந்த மாணவர் தேர்வு எழுவதில்
எந்த தடையும் இல்லை," என்றார்.
good
ReplyDelete