'பிளஸ் 2 ஆங்கிலம் முதல் தாள், அதிக மாணவர்கள்
தேர்ச்சி பெறும் வகையில் எளிமையாக இருந்தது என, மாணவர்களும், ஆசிரியரும்
கருத்து தெரிவித்தனர்.
ஏ.ஷேக்அப்துல்லா, நேருஜி நினைவு நகரவை
மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல்: முதல் பாடத்தில் இருந்து கட்டுரை வரும் என,
எதிர்பார்த்தோம். வரவில்லை. பகுதி 'இ' ல், கேட்கப்பட்ட 'போயம்' கேள்விகள்
கடினம். இதனால், மதிப்பெண்கள் குறைய வாய்ப்புள்ளது. இலக்கண பகுதிகளில்
இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் எளிமை. ஓரளவு நல்ல மதிப்பெண் கிடைக்கும்
என்ற நம்பிக்கை உள்ளது.
எஸ்.சரண்யா, எஸ்.எம்.பி.எம்., பள்ளி,
திண்டுக்கல்: 'புளு பிரின்ட்' படி, கேட்கப்பட்டதால், அனைத்து
கேள்விகளுக்கும் பதில் அளிக்க முடிந்தது. பயிற்சி பகுதியில் கேட்கப்பட்ட
கேள்விகள் அனைத்தும், மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் இருந்தது.
பாடத்தின் பின்புறத்தில் உள்ள பயிற்சிகள், கேள்விகளை முழுமையாக
படித்திருந்தால், 90 மதிப்பெண்கள் பெற முடியும்.
இ.சேசுராஜாபயஸ், ஆங்கில ஆசிரியர், நேருஜி
நினைவு நகரவை மேல்நிலைப்பள்ளி: சில பகுதிகளில் கடினமாக இருந்தாலும், சில
பகுதிகளில் எளிமையான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. ஆங்கில வழியில்
பயிலும் நகர்ப்புற மாணவர்கள் மட்டுமே முழு மதிப்பெண் பெறமுடியும்.
பாடத்தின் பின்பக்கத்தில் உள்ள மொழிப்பயிற்சிகளில் இருந்து அதிகப்படியான
கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. பகுதி'சி'ல், 43 வது வினாவில்,
'பில்லியர்ட்ஸ்,' 'ஸ்குவாஷ்' விளையாட்டு குறித்து கேட்கப்பட்டுள்ளது.
கட்டுரை, 'போயம்' கேள்விகள் கடினமாக இருந்தது. இதனால், மதிப்பெண்
குறையவாய்ப்புள்ளது. ஆனால், அதிகம் பேர் தேர்ச்சி பெறும் வகையில் கேள்விகள்
கேட்கப்பட்டிருந்ததால், தேர்ச்சி விகிதம் குறையாது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...