பிளஸ் 2 கணித தேர்வில், அச்சுப் பிழையுடன் வினா இடம் பெற்றதால், மறு தேர்வு
நடத்த கோரிய மனுவை, மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்துள்ளது.
மதுரை, ரத்தினவேல் பாண்டியன் தாக்கல் செய்த மனு: என் மகன் கார்த்திகேயன்,
கடந்த, 14ம் தேதி, பிளஸ் 2 கணிதத் தேர்வு எழுதினார். பகுதி, 'பி'யில்,
வினா, 47ல், ஒரு எண்ணில் அச்சுப்பிழை காரணமாக, வினாவின் பொருள் மாறி,
குழப்பம் ஏற்பட்டது.
இதற்கு தவறான பதில் எழுதியிருந்தாலும், 6 மதிப்பெண் வழங்குமாறு, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அந்த வினாவிற்கு பதிலளிக்க, கார்த்திகேயன், 15 நிமிடம் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளார். மனக்குழப்பத்தால், மற்ற கேள்விகளுக்கு, தெளிவான பதிலை குறித்த நேரத்தில், எழுத முடியவில்லை. பொறியியல், மருத்துவ படிப்பில் சேர, 0.5 மதிப்பெண் கூட, மிக மதிப்புமிக்கது. கூடுதலாக, 6 மதிப் பெண் வழங்கப்படும் என்ற உத்தரவால், திறமை குன்றிய மாணவர்கள் கூட, அதிக மதிப்பெண் பெற வாய்ப்புள்ளது. எனவே, கடந்த, 14ல் நடந்த கணிதத் தேர்வை ரத்து செய்து, மறு தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டு இருந்தார். நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன், மனு விசாரணைக்கு வந்தது.
தகுதியற்றது:
அரசு வழக்கறிஞர் முத்துக்கண்ணன், 'வினா, 47க்கு விடையளித்திருந்தால், அதாவதுதவறாக எழுதியிருந்தால் கூட, 6 மதிப்பெண் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. மனுதாரர், அக்கேள்விக்கு விடையளிக்காததால், அவருக்கு மதிப்பெண் வழங்க இயலாது' என, தெரிவித்தார். இதையடுத்து, நீதிபதி, 'இம்மனு தகுதியற்றது; தள்ளுபடி செய்யப்படுகிறது' என, உத்தரவிட்டுள்ளார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...