பிளஸ்–2 தேர்வு: உயிரியியல், தாவரவியல் தேர்வு எளிமையாக இருந்தது வரலாறு தேர்வில் சில கேள்விகள் கடினமாக இருந்ததாக மாணவ–மாணவிகள் கருத்து.
பிளஸ்–2 மாணவர்களுக்கு நேற்று நடைபெற்ற உயிரியியல், தாவரவியல் தேர்வு
எளிதாகஇருந்தது என்றும், வரலாறு தேர்வில் சில கேள்விகள் சற்று கடினமாக
இருந்தது என்றும் தேர்வு எழுதிய மாணவ–மாணவிகள் கருத்து தெரிவித்தனர்.
பிளஸ்–2 தேர்வு
தமிழகம் முழுவதிலும் 8 லட்சத்து 75 மாணவ–மாணவிகள் எழுதும் பிளஸ்–2 தேர்வு கடந்த 3–ந்தேதி தமிழ் முதல் தாள் தேர்வுடன் தொடங்கியது. தமிழ் முதல் தாள், தமிழ் இரண்டாம் தாள், ஆங்கிலம் முதல் நாள், ஆங்கிலம் இரண்டாம் தாள், இயற்பியல், பொருளாதாரம், கணிதம், விலங்கியல், வேதியியல், கணக்குப்பதிவியல் தேர்வுகள் முடிவடைந்த நிலையில், நேற்று உயிரியியல், தாவரவியல், வரலாறு, வியாபாரகணிதம் ஆகிய 4 தேர்வுகள் நடைபெற்றன.மருத்துவம் படிப்பிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் உயிரியியல் தேர்வு மிகவும் எளிதாக இருந்ததாக மாணவ–மாணவிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
உயிரியியல், தாவரவியல்...
இதுதொடர்பாக சென்னை எழும்பூரில் உள்ள மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உயிரியியல் தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவிகள் நிரோஷா, வரலட்சுமி ஆகியோர் கூறுகையில், ‘உயிரியியல் தேர்வில் அனைத்து கேள்விகளும் மிக சுலபமாக இருந்தது. பாடப்புத்தகத்தில் இருந்தே எல்லா கேள்விகளும் கேட்கப்பட்டிருக்கிறது. உயிரியியல் தேர்வில் கண்டிப்பாக சிறப்பான மதிப்பெண்களை பெறுவோம் என்ற நம்பிக்கைஎங்களுக்கு உள்ளது’ என்றனர். இதே கருத்தை பெரும்பாலான மாணவ–மாணவிகள் பிரதிபலித்தனர்.உயிரியியல் தேர்வை போன்றே தாவரவியல் தேர்வும், வியாபார கணித தேர்வும் எளிதாக இருந்ததாக பெரும்பாலான மாணவ–மாணவிகள் கருத்து தெரிவித்தனர்.
எதிர்பாத்த கேள்விகள்
வரலாறு தேர்வு எழுதிய மாணவிகள் காவியா, மகேஸ்வரி ஆகியோர் கூறுகையில், ‘வரலாறு தேர்வில் நாங்கள் எதிர்பார்த்த கேள்விகள் கேட்கப்பட்டிருந்தாலும், 6 மதிப்பெண்வினாக்களில் 2–ம், 10 மதிப்பெண் வினாக்களில் 2–ம் வெளியில் இருந்து கேட்கப்பட்டிருந்தது. அதை ‘சாய்ஸ்’ முறையில் விட்டுவிட்டோம். மற்றபடி அனைத்து வினாக்களும் மிகவும் எளிதாகவே இருந்தது. நிச்சயம் நல்ல மதிப்பெண் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.’ என்றனர்.
மாணவ–மாணவிகள் கொண்டாட்டம்
நேற்று வரலாறு, வேதியியல் பிரிவு மாணவர்களுக்கான தேர்வு முடிவடைந்தது. தேர்வு முடிந்த மகிழ்ச்சியை மாணவ–மாணவிகள் தேர்வு மைய வளாகத்தில் கொண்டாடினர். ஒருவருக்கொருவர் வண்ண பொடிகளை தூவியும், மைகளை ஊற்றியும், கேக் வெட்டியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.கடந்த 18 நாட்களாக தேர்வு பரபரப்பில் இருந்த மாணவ–மாணவிகள் தேர்வு முடிவடைந்ததையடுத்து உற்சாக களிப்பில் வீடு திரும்பினர். வரும் 24–ந்தேதி (திங்கட்கிழமை) பொலிட்டிக்கல் சயின்ஸ், நர்சிங் சயின்ஸ் தேர்வு நடக்கிறது. 25–ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ–கெமிஸ்ட்ரி தேர்வுடன் பிளஸ்–2 தேர்வு முடிவடைக்கிறது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...