பிளஸ் 2 வேதியியல் தேர்வில்,கேள்விகள் எளிமையாக கேட்கப்பட்டிருந்ததாக' மாணவர்கள், ஆசிரியை தெரிவித்தனர்.
கே.நிபாஷத் பர்கானா (மாணவி,ஆக்ஸ்வேர்ட்
மெட்ரிக்., பள்ளி, சிவகங்கை): வேதியியல் தேர்வில், 30 ஒரு மதிப்பெண்
கேள்விகளில், 3 மட்டுமே, கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. மற்றபடி, 3, 5, 10
மதிப்பெண் கேள்விகள் அனைத்தும், மிக எளிமையாக இருந்தன. நன்றாக படிக்கும்
மாணவர்கள், கட்டாயம் வேதியியலில், 200க்கு 200 எடுக்கலாம். கேள்விகள்
அனைத்தும், 'புளூபிரிண்ட்'டில் இருந்தே கேட்கப்பட்டது. பத்து மதிப்பெண்
கேள்விகளுக்கு, விளக்கமாக பதில் அளிக்க வேண்டியுள்ளது. இதனால், இந்த
கேள்விகள் அனைத்திற்கும், சற்று வேகமாக பதில் அளிக்கவேண்டி இருந்தது.
புத்தகத்தை நன்கு படித்திருந்தால், 'இலகுவாக' விடைகளை எழுதும் வகையில்,
கேள்விகள் இருந்தது.
சமீல் அகமது (மாணவர், மன்னர் மேல்நிலைப்பள்ளி,
சிவகங்கை):ஒரு மார்க் கேள்விகள் 30ல், 24 வினாக்கள் 'புளூபிரிண்ட்'
பகுதியில் இருந்தும், பிற வினாக்கள் பாட புத்தகத்தில் இருந்தும் கேட்க
பட்டதால் முழுமையாக எழுத இயலவில்லை. 3 மார்க் வினாக்களுக்குரிய விடையை
குறைந்த அளவில் எழுதும் வகையில் கேட்டிருந்தாலும், சில வினாக்கள்
புத்தகத்திற்குள் நுழைந்து கேட்கப்பட்டுள்ளது. இதே பிரிவில் எதிர்பார்க்காத
ஓரிரு வினாக்களும் வந்திருந்தன. 5 மார்க் வினாக்களில் பெரும்பாலும்
தெரிந்த வினாக்களாக வந்தது மகிழ்ச்சி.
எஸ்.வனிதா, (ஆசிரியை, அரசு மேல்நிலைப்பள்ளி,
கொல்லங்குடி):ஒரு மதிப்பெண் கேள்விகளில், 7 மட்டுமே சற்று கடினமாக
கேட்கப்பட்டது. அதுவும், புத்தகத்தில் இருந்தே மறைமுகமாக எடுக்கப்பட்ட
கேள்விகள் தான். மற்றபடி, அனைத்து கேள்விகளும் மிக எளிமை. கிராமப்புற
மாணவர்கள் கூட, வேதியியலில் நல்ல மதிப்பெண் பெறலாம். பெரும்பாலும்,
'புக்பேக்'-ல் இருந்தே, கேள்விகள் இருந்தது. கடந்த 5 ஆண்டுகள் அரசு பொது
தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் தான், அதிகளவில் இடம் பெற்றிருந்தன. கடந்த
பொதுத்தேர்வு வினாக்களை படித்திருந்தால், மாணவர்கள் எளிதில், 200 மதிப்பெண்
பெறலாம்.எதிர்பார்த்த கேள்விகள் அனைத்தும் வந்ததால்,மாணவர்கள் மகிழ்ச்சி
அடைந்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...