நாடாளுமன்ற தேர்தல், ஆலந்தூர் தொகுதி இடைத்
தேர்தலுக்கான வேட்பு மனுக்களை மார்ச் 29 முதல் ஏப். 5ம் தேதி வரை தாக்கல்
செய்யலாம் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இது குறித்து தலைமைத்
தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
நாடாளுமன்ற தொகுதிகளுக்கான
வேட்புமனுக்கள் மற்றும் ஆலந்தூர் தொகுதி சட்டப் பேரவை இடைத்தேர்தலுக்கான
வேட்புமனுக்களை மார்ச் 29 முதல் ஏப். 5 வரை அந்தந்த தொகுதிக்கான தேர்தல்
அதிகாரியிடம், காலை 11 முதல் மதியம் 3 மணி வரை தாக்கல் செய்யலாம். மார்ச்
30 (ஞாயிறு) மற்றும் மார்ச் 31 (தெலுங்கு வருடப் பிறப்பு) ஆகிய நாட்கள்
பொது விடுமுறை என்பதால் இந்த 2 நாட்களிலும் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய
முடியாது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...