தனியார் பள்ளிகளில் கட்டாயக்கல்விச் சட்டத்தில்
25 சதவிகித இட ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்ட மாணவர் குறித்த விபரங்களையும்
பள்ளிகள் திரும்ப பெற வேண்டிய கட்டணம் குறித்த விபரங்களை அனுப்பி வைக்க
இயக்கனரகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள கட்டாயக்
கல்விச்சட்டத்தில் மாணவனின் கல்வி உரிமை மறுக்கப்படக்கூடாது என்பதற்காக
தனியார் பள்ளிகளிலும் 25 சதவிகித இடஒதுக்கீடு ஏழை, எளிய மாணவர்களுக்கு
ஒதுக்க வேண்டும் எனவும், அதற்கான கட்டணத்தை அரசு செலுத்தும் எனவும்
அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, தமிழகத்தில் உள்ள தனியார் மழலையர்
மற்றும் தொடக்கப்பள்ளிகளில் இந்த இட ஒதுக்கீட்டில் மாணவர்
சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கான விபரங்களையும், பள்ளிக்கட்டண விபரங்களையும்
ஏற்கனவே அனுப்பி வைத்தும், இதுவரை அதற்கான நிதி ஒதுக்கீடு எதுவும்
கிடைக்கவில்லை. இதனால், வரும் கல்வியாண்டில் இந்த இட ஒதுக்கீட்டை கைவிடவும்
பெரும்பாலான பள்ளி முடிவு செய்தன.
இந்நிலையில், தொடக்கக்கல்வி இயக்குனரகத்தில்
இருந்து பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய கட்டணம் குறித்த விபரங்களை
உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், இக்கல்வியாண்டின் முடிவுக்குள்
பள்ளிகளுக்கான தொகை திரும்ப வழங்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது:
கட்டாயக்கல்விச் சட்டத்தில் அனைத்து பள்ளிகளும் மாணவர் சேர்க்கையில் 25
சதவிகிதம் ஏழை, எளிய மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என
உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், முன்னணி பள்ளிகளில் இதை முறையாக
பயன்படுத்துவதில்லை. அலுவலர்களின் வற்புறுத்தலில், சிறிய மழலையர் மற்றும்
துவக்கப்பள்ளி, மாணவர்களை இலவசமாக சேர்த்துள்ளன. ஆனாலும், அதற்கான
கட்டணத்தை திரும்ப செலுத்தாததால், பள்ளி நிர்வாகம் மன உளைச்சலுக்கு ஆளாகும்
நிலை உள்ளது. இதனால், இட ஒதுக்கீடு வழங்காத முன்னணி பள்ளிகளையும்
கல்வித்துறை அலுவலர்கள் கேட்க முடியாத நிலை உருவானது.
தற்போது, பள்ளிகளில் மாணவர் சேர்க்கப்பட்ட
விபரங்களையும், அதற்கான கட்டண விபரங்களையும் உடனடியாக அனுப்பி வைக்குமாறு
கேட்டுள்ளது. இதனால் நடப்பு கல்வியாண்டுக்குள் நிதி ஒதுக்கீடு செய்ய
வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Many of the private schools are cheating.they are showing wrong information to the government.govt take strict action for this..............
ReplyDelete