Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழகத்தில் 23 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது...

           தமிழகத்தில், பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட ஆய்வில், நிலத்தடி நீர்மட்டம் 23 மாவட்டங்களில் குறைந்து இருப்பது தெரிய வந்துள்ளது. இதற்கு மழைநீர் சேகரிப்பு திட்டம் முடங்கியதும், நீர் நிலைகள் ஆக்கிரமிப்பும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.
 
           தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் குறித்து, மாநில நில மற்றும் நீர் வள ஆதார விவர குறிப்பு மையம் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள 3,238 பகுதிகளில் உள்ள திறந்தவெளி கிணறுகள் மற்றும் 1480 ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் ஆய்வு செய்யப்படுகிறது. தமிழகத்தில் அந்தந்த பகுதிகளில் சேகரிக்கப்படும் நீர் அளவு, மொத்தமாக ஒவ்வொரு மாதமும் நீர்வள ஆதாரத்துறை மூலம் கணக்கிடப்படுகிறது.தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவ மழை எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததும், அதிகப்படியான நிலத்தடி நீர் எடுக்கப்பட்டதன் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் மிகவும் குறைந்து போய் உள்ளது. குறிப்பாக, வணிக நோக்கில் அதிகளவு நீர் எடுக்கப்படுவதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. இதனால், ஆண்டுக்கு ஆண்டு நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. நிலத்தடி நீர் அதிகரிக்க தமிழக அரசு கொண்டு வந்த மழைநீர் சேகரிப்பு திட்டம் கிடப்பில் போடப்பட்டதும், அதை அதிகாரிகள் கண்டுகொள்ளாததும் ஒரு காரணம்.

           மேலும், ஏரிகள் மற்றும் நீர் நிலைகள் ஆக்ரமிப்பு மற்றும் அவற்றை தூர்வராமல் இருப்பது போன்ற காரணங்களால் நிலத்தடி நீர் குறைந்துபோனதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக கூறப்படுகிறது.கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட ஆய்வில் 2013 பிப்ரவரியை காட்டிலும், தமிழகத்தில் திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, கடலூர் உட்பட 23 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது. 

நிலத்தடி நீர் மட்டம் குறைந்த மாவட்டங்களின் விவரம்:

திருவண்ணாமலை  21.42 மிமீ

தர்மபுரி          8.93 மிமீ

கிருஷ்ணகிரி       7.50 மிமீ

கடலூர்          6.68 மிமீ

வேலூர்          6.46 மிமீ

இதில், தர்மபுரி மாவட்டம் கடந்த ஜனவரி மாதம் நடந்த ஆய்வில் 2013யை விட நிலத்தடி நீர் மட்டம் கூடுதலாக இருந் தது. ஆனால், பிப்ரவரி மாத நிலவரப்படி குறை வாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive