'தமிழகத்தில், ஏப்ரல், 24ல், லோக்சபா தேர்தல்
ஓட்டுப் பதிவு நடப்பதால், அன்றும், அதற்கு முந்தைய நாளான, 23ம் தேதியும்,
பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறுத்தப்படும்' என,
தேர்வுத்துறை வட்டாரம், நேற்று தெரிவித்தது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், தற்போது, பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்து வருகிறது. இத்தேர்வு, வரும், 25ம் தேதியுடன் முடிகிறது. மறுநாள், 26ல் இருந்து, ஏப்ரல், 9 வரை, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடக்கிறது. தமிழகத்தில் உள்ள, 39 லோக்சபா தொகுதிகளுக்கு, ஏப்ரல், 24ல், ஓட்டுப்பதிவு நடக்கிறது. ஓட்டுப்பதிவு நடக்கும் தேதிக்குள், தேர்வு நடந்து முடிந்தாலும், ஓட்டுப்பதிவு நடக்கும் நாளில், பத்தாம் வகுப்பு, விடைத்தாள் திருத்தும் பணிகள் நடக்கும். 70க்கும் அதிகமான பள்ளிகளில், விடைத்தாள் திருத்தும் பணிகள் நடக்க உள்ளன. அதே பள்ளிகளில், ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படுவதற்கு, வாய்ப்பு இருப்பதாக, தேர்வுத்துறை வட்டாரம் தெரிவித்தது.
இது குறித்து, துறை வட்டாரம், மேலும்
தெரிவித்ததாவது: பெரும்பாலும், ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் தான், ஓட்டுச்
சாவடிகள் அமைக்கப்படுகின்றன. உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில்,
ஓட்டுச்சாவடி அமைக்கப்படுவது, மிகவும் குறைவாகத் தான் இருக்கும். எனினும்,
விடைத்தாள் திருத்தும் பணிகள் நடக்கும் சில பள்ளிகளில், ஓட்டுச்சாவடி
அமைக்கப்படலாம் என, எதிர்பார்க்கிறோம். எனவே, ஓட்டுப் பதிவு நடக்கும்,
ஏப்ரல், 24 மற்றும் அதற்கு முந்தைய நாளான, 23 ஆகிய தேதிகளில், விடைத்தாள்
திருத்தும் பணிகளை நிறுத்தி வைப்போம். தேர்தல் நாளன்று, பொது விடுமுறை
விடப்படுகிறது. எனவே, அதற்கு முந்தைய ஒரு நாள் மட்டும் தான், விடுமுறை.
இந்த இரு நாட்களால், விடைத்தாள் திருத்தும் பணிகளில், பெரிய தொய்வு
ஏற்படாது. இவ்வாறு, தேர்வுத்துறை வட்டாரம் தெரிவித்தது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...