சி.பி.எஸ்.இ., சமீபத்தில் நடத்திய மத்திய
ஆசிரியர் தகுதித் தேர்வின்(CTET) முடிவுகள் வரும் 21ம் தேதி வெளியிடப்படும்
என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 16ம் தேதி நடைபெற்ற
இத்தேர்வை மொத்தம் 8.26 லட்சம் பேர் எழுதினர்.
தேர்வெழுதியவர்களின் OMR
sheet -களின் இமேஜ்கள், மொழிகள் மற்றும் பாடங்கள் குறித்த தகவல்களுடன்
வாரியத்தால் பதிவேற்றம்(upload) செய்யப்பட்டுள்ளன. CBSE/CTET வலைதளத்தில்,
வாரியத்தால், Answer key பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது நாடு
முழுவதும் ஆசிரியர்களுக்கென்று, தேசிய மற்றும் மாநில அளவிலான
தகுதித்தேர்வுகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. முந்தைய தேர்வுகளின்
முடிவுகள்படி பார்த்தால், தேர்வெழுதியோரில் சுமார் 10% அளவிற்கும்
குறைவானவர்களே தேர்ச்சியடைந்திருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது. இது
பல்வேறான விமர்சனங்களை கிளப்பி விட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...