Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தொடக்கக்கல்வி - பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு தேர்தலுக்கு பின் நடந்தாலும் சிறப்பு நிகழ்வாக 2013 முன்னுரிமைப் பட்டியலின்படி நடத்தப்படும் என இயக்குனர் உறுதி

           இன்று மாலை தொடக்ககல்வி இயக்குனர் அவர்களை பல்வேறு கோரிக்கைகள் குறித்து தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலர் திருமிகு செ.முத்துசாமி சந்தித்து சுமார் 30நிமிடங்கள் பேச்சு நடத்தினார். அப்போது பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு குறித்தும் விவாதிக்கப்பட்டது.

முத்துசாமி: பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு குறித்து தற்போதைய நிலை யாது?

இயக்குனர்: பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த தயாரான நிலையில் மாறுதல் அளித்த பின்பே பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை சில சங்கங்களால் வலியுறுத்தப்பட்டதாகவும்,அதனால் எவ்வாறு நடத்தலாம் என தெளிவுறை கேட்டு அரசுக்கு கடிதம் எழுதப்பட்டதையும் தங்களுக்கு ஏற்கனவே கூறியதை நினைவு கூர்ந்து .அரசிடம் இருந்து இன்னும் விளக்கம் வரவில்லை .என்றார்

முத்துசாமி: தேர்தல் அறிவிக்கப்பட்டால் பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு நிலை யாது?

இயக்குனர்: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் தேர்தல் நடைமுறைகள் அமுலுக்கு வந்தால் கலந்தாய்வு நடத்தப்பட முடியாது.

முத்துசாமி :பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு இவ்வாண்டு நடைபெறாததால் தேர்தலுக்கு பிறகு நடத்தப்படும் கலந்தாய்வின் போது-2013 பேனலைன் அடிப்படையிலா அல்லது2014 பேனலின் அடிப்படையில் நடத்தப்படுமா? நாங்கள் 2013 பேனல் அடிப்படையிலேயே நடத்த வலியுறுத்துகிறோம்.

இயக்குனர்: தங்கள் நிலை நன்றாக புரிகிறது.
2013ஆம் ஆண்டில் பட்டதாரிஆசிரியர் மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு முற்றாக நடைபெறவில்லை. அதற்கு

1. இரட்டைப்பட்ட வழக்கு நீதிமன்ற்த்தில் நீண்ட நாட்கள் முடுவுறா நிலை

2. வழக்கு முடிந்தபின்பு காலிப்பணியிட விவரம் சேகரப்பதிலும்,பேனல் தயாரிப்பதிலும் ஏற்பட்ட நடைமுறைக்காரணம்.

3.பதவி உயர்வுநடத்தப்பட தயாரான நிலையில் அரசிடம் விவரம் கேட்டு கடிதம்.

4.தேர்தல் தேதி அறிவிப்பு

போன்ற அசாதாரண சூழ்நிலையால் பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு நடத்தப்படவில்லை என்ற காரணத்தினால் சிறப்பு நிகழ்வாக, இவ்வாண்டு ஒதுக்கப்படும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும் சேர்த்து

2013 பேனல் அடிப்படையிலேயே தேர்தலுக்கு பின்னர் நடத்தப்படும், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு மட்டும் நடத்தப்படும் என நான் தங்களிடம் உறுதியாக தெரிவிக்கிறேன். இதர்கான் நடவடிக்கை என்னால் எடுக்கப்படும் எனவும் கூறினார். இயக்குனருக்கு நன்றி கூறி புறப்பட்டனர் நமது இயக்கப்பொறுப்பாளர்கள்.

தகவல்
கே.பி.ரக்‌ஷித்
மாநில துணைத்தலைவர்





1 Comments:

  1. Sir,
    Neengal sollvathu unmayaga irukkum patchathil naangal athanai nambugirom. Muthalil 2013 panel nadakkum endra nambikkayil ullom. Engalai kai vittu vidatheergal.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive