இந்த ஆண்டு பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீடு
மார்ச் 20-ஆம் தேதிக்குப் பிறகே தொடங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்கக
வட்டாரங்கள் தெரிவித்தன.
பிளஸ் 2 தேர்வு கடந்த திங்கள்கிழமை
(மார்ச் 3) தொடங்கியது. இந்தத் தேர்வை பள்ளிகளின் மூலம் 8.26 லட்சம்
மாணவர்களும், தனித்தேர்வர்களாக 53 ஆயிரம் பேரும் எழுதி வருகின்றனர்.
மொழிப்பாடம், ஆங்கிலப் பாட தேர்வுகள்
வெள்ளிக்கிழமையோடு (மார்ச் 7) நிறைவுபெற்றன. வழக்கமாக, ஆங்கிலப் பாடத்
தேர்வுகள் முடிந்த பிறகு விடைத்தாள் மதிப்பீடு தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு முக்கியப் பாடத்
தேர்வுகள் முடிந்தபிறகே விடைத்தாள் மதிப்பீடு தொடங்கப்படும் என அரசுத்
தேர்வுகள் இயக்கக வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும், பிளஸ் 2 தேர்வில் பல்வேறு புதிய
மாற்றங்கள் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பிளஸ் 2 விடைத்தாள்
மதிப்பீட்டுக்கு முழுமையாக 3 வாரங்கள் இருந்தாலே போதும். எனவே, இந்தப்
பணிகளை மார்ச் 20-ஆம் தேதிக்குப் பிறகு தொடங்கினாலே ஏப்ரல் 14-ஆம்
தேதிக்குள் முடித்துவிடலாம்.இந்தத் தேர்வு மையங்களில் எத்தனை ஆசிரியர்களை பணியமர்த்துவது போன்ற விவரங்களை இறுதிசெய்ய வேண்டியுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்காக தமிழகத்தில் ஏப்ரல் 24-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26
முதல் ஏப்ரல் 9-ஆம் தேதி வரை நடைபெறுவதால், இந்த விடைத்தாள்களை மதிப்பீடு
செய்யும் பணிகள் பாதிக்கப்படும். தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து
விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து
ஆராய்வதற்காக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பங்கேற்கும் ஆய்வுக்
கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது.இந்தக் கூட்டத்துக்குப் பிறகு விடைத்தாள் மதிப்பீடு தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.காப்பியடித்த 9 பேர்: தமிழகம் முழுவதும்
வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிளஸ் 2 ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வில்
காப்பியடித்ததாக 9 மாணவர்கள் சிக்கினர்.ஆங்கிலம் இரண்டாம் தாளுக்கான வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்ததாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
பிளஸ் 2 தேர்வில் கொண்டுவந்துள்ள புதிய
மாற்றங்களால் காப்பியடித்தவர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக அதிகாரிகள்
தெரிவித்தனர். ஆங்கிலம் முதல் தாளில் காப்பியடித்ததாக 14 பேர் சிக்கினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...