அடுத்த 10 ஆண்டுகளில், உலகெங்கிலும் சுமார் 2
லட்சத்து 50 ஆயிரம் ஆசிரியர்கள் பயிற்சியளிக்கப்பட உள்ளார்கள். ஐக்கிய அரபு
அமீரகத்திலுள்ள(UAE) ஒரு அமைப்பு மற்றும் என்.ஆர்.ஐ.,கள் நடத்தும் சர்வதேச
கல்வி நிறுவனத்தின் நன்கொடை பிரிவு ஆகியவை இணைந்து இந்தப் பயிற்சி
திட்டத்தை நடத்தவுள்ளன.
யுனெஸ்கோ அறிக்கையின்படி, 5
கோடியே 70 லட்சம் ஆரம்ப பள்ளி செல்லும் வயதுடைய குழந்தைகளும், 7 கோடியே 10
லட்சம் நடுநிலைப் பள்ளி செல்லும் வயதுடைய குழந்தைகளும் பள்ளிக்கு
செல்லாமல் உள்ளனர். வளரும் நாடுகளில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு
சிறப்பான கற்றலுக்கு ஒரு தடையாக, போதுமான பயிற்சி பெறாத ஆசிரியர்களே
இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. உலகில் பெருகிவரும் மக்கள்
தொகைக்கு ஏற்ப, அடுத்த 20 ஆண்டுகளில், குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க,
சுமார் 70 லட்சம் புதிய ஆசிரியர்கள் தேவைப்படுவார்கள் என்று
மதிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...