ஆசிரியர் தகுதி தேர்வில், விலக்கு
அறிவிக்கப்பட்டும், தகுதி காண் பருவத்திற்காக அனுப்பப்படும் ஆசிரியர்களின்,
பணிப் பதிவேடுகள் (எஸ்.ஆர்.,கள்) பரிசீலிக்கப்படுவதில்லை, என சர்ச்சை
எழுந்துள்ளது. இதனால், 18 ஆயிரம் ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர். தமிழகத்தில், 2010 முதல் ஆசிரியர் தகுதி தேர்வு நடைமுறையில் உள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 7.3.2012ல் அறிவிக்கப்பட்ட
ஓர் உத்தரவில்(எண்:04/2012), 23.8.2010க்கு முன் ஆசிரியர் பணி நியமனம்
தொடர்பாக சான்றிதழ் சரிபார்ப்பு அல்லது அதுதொடர்பான நடவடிக்கைக்கு
உட்பட்டிருந்தால், 23.8.2013க்கு பின் பணிநியமனம் செய்வதில், அந்த
ஆசிரியருக்கு டி.இ.டி., தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதாக 25.5.2013ல்,
டி.ஆர்.பி., அறிவிப்பு வெளியிட்டது.
இதன்படி, மாநிலத்தில் அரசு மற்றும் உதவி பெறும்
பள்ளிகளில், பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள், 2010 முதல் 2012 வரை,
18 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள், டி.இ.டி., தேர்வு
எழுத தேவையில்லை என அப்போது அறிவுறுத்தப்பட்டது.இந்நிலையில், பணியேற்று
இரு ஆண்டுகள் நிறைவடைந்த ஆசிரியர்கள், தகுதி காண் பருவத்திற்காக, அவர்களது
பணிப் பதிவேடுகளை, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
அப்படி அனுப்பப்படும் பணிப் பதிவேடுகளை கல்வி அதிகாரிகள் பரிசீலித்து,
'உங்கள் பணிநியமன உத்தரவில், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற
பின்தான், உங்களது தகுதி காண் பருவத்தை முடிக்க இயலும்,' என பதில் கூறி,
சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு திருப்பி அனுப்பி
வைக்கப்படுகின்றன.பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறுகையில், "டி.இ.டி.,
தேர்வில், அரசு விலக்கு அளித்தும், அது நடைமுறைப்படுத்தவில்லை," என்றனர்.
பட்டதாரி ஆசிரியர் சங்கத் தலைவர்
நாகசுப்பிரமணியன், செயலாளர் முருகன் கூறியதாவது: இது 18 ஆயிரம்
ஆசிரியர்களின் வாழ்வாதாரப் பிரச்னை. ஆசிரியர் தேர்வு வாரியம்
அறிவிப்புப்படி, 23.8.2010க்கு முன் பணி நியமனம் செய்வதற்கான சான்றிதழ்
சரிபார்ப்பு முடித்தவர்களுக்கு, டி.இ.டி., தேர்வில் இருந்து விலக்கு அளிக்க
வேண்டும். அதற்கான 'தவிர்ப்பாணை', பள்ளிக் கல்வி மூலம் ஆசிரியர்களுக்கு
வழங்க வேண்டும்,என்றனர்.
TET 2012 CHENNAI COURT ISSUE , CAN U ANSWER THIS QUESTION ,
ReplyDelete1. 2013 கு மட்டும் வன் கொடுமை சட்டம் பாயும் என்றால் ஏன் 2012 கு பாயாது
2.ALREADY THE G.O SIGNED BACK DATED FOR 2013 WHEY NOT IT AS SIGNED BACK DATED 2012
3.WE R SUCCEED IN ONE AND HALF AN HOUR EXAM . IT IS MORE GREATER THAN 3 HOURS EXAM
4.WE ALSO BELONGS TO SAME SC, OBC CATEGARY
5.EXAM NOT CONDUCTED BY DIFFERENT BOARD LIKE TNPSC... , BUT THE SAME BOARD TRB ONLY CONDUCTED
6.EVEN 2013 NOTIFICATION ALSO NOT MENSITION ANY RELAXATION BUT 82-89 OF 2013 GOT IT , WHY WE(2012) R NOT ?
PLZ ANSWER THIS QUESTION
BECAUSE OF THIS QUESTIONS, 2013 CV FINISHED CANDIDATE R SUFFERING
pls contact if anybody CV DONE BETWEEN MARCH 2010 TO FEB 2011 AND GOT JOB..
ReplyDeleteWE R NOW IN CRITICAL POSITION..
CONTACT URGENT..
9962228283-9962228284