வருவாய்த்துறையினர் மெத்தனம் காரணமாக,
கல்வித்துறையினர் 165 பேருக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மூலம் நோட்டீஸ்
அனுப்பப்பட்டது. தஞ்சை லோக்சபாவுக்கு உள்பட்ட தஞ்சை சட்டசபை தொகுதியில்,
அமைக்கப்பட்ட வாக்குப்பதிவு மையங்களில், கல்வித்துறையிலுள்ள ஆசிரியர்,
ஆசிரியைகள், அலுவலர்கள், தலைமை வாக்குச்சாவடி அலுவலர், வாக்குச்சாவடி நிலை 1
ஆகிய பணிகளில் அமர்த்தப்படுவர்.
இதற்காக, முன்கூட்டியே வருவாய்த் துறையிலுள்ள
ஆர்.ஐ.,- வி.ஏ.ஓ., மூலம் தேர்தல் பணி ஆணை அந்தந்த பள்ளிகளிலுள்ள ஆசிரியர்,
ஆசிரியைகளுக்கு நேரடியாக வழங்கப்பட்டு, அக்னாலேஜ்மென்ட் கையெழுத்து
பெறப்படும். ஆனால், தஞ்சை மாவட்ட கல்வித்துறைக்குட்பட்ட தஞ்சை நகரம்,
ஊரகம், திருவையாறு, பூதலூர் ஆகிய ஒன்றியங்களிலுள்ள ,165 ஆசிரியர், ஆசிரியை
மற்றும் அலுவலர்களுக்கு பணி ஆணையை, அந்தந்த பகுதி வருவாய்த்துறையினர்
வழங்கவில்லை. தஞ்சை நகரத்தில், 13 பேருக்கு ஏ.இ.ஓ.,விடம் பணி ஆணை
ஒப்படைக்கப்பட்டு, உரியவர்களுக்கு சேர்க்கப்பட்டுள்ளது. பணி ஆணை
கிடைத்தவர்கள் மட்டும், தஞ்சை சரபோஜி கல்லூரியில் இம்மாதம், 8ம் தேதி
பயிற்சி வகுப்பில் பங்கேற்றனர். பணி ஆணை கிடைக்காததால், 165 பேர்
பங்கேற்கவில்லை.
இதற்கு வருவாய்த்துறையினர் மெத்தனப்போக்கு, அலட்சியமே
காரணம் என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பயிற்சி வகுப்பில் பங்கேற்காத, 165
பேருக்கும், மார்ச், 20ம் தேதியிட்டு, "தஞ்சை லோக்சபாவுக்கு உள்பட்ட
தேர்தல் பணிக்காக, 8ம் தேதி பயிற்சி வகுப்பில் பங்கேற்கவில்லை. இது, மக்கள்
பிரதிநிதித்துவ சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம். எதிர்வரும் நாளில்
பங்கேற்க வேண்டும். தவறும்பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்' என,
நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. முறைப்படி, தேர்தல் பணி ஆணையை வழங்குவதில்,
வருவாய்த் துறையினரின் மெத்தனத்தால், மெமோ பெற்றுள்ள கல்வித்துறையினர் மன
உளைச்சலில், புலம்பி தவிக்கின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...