Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

10ம் வகுப்பு தேர்வு: 40 ஆயிரம் பேர் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்

               பத்தாம் வகுப்பு தேர்வுகள் வரும் 26ம் தேதி தொடங்குகிறது. 10 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். தேர்வை கண்காணிக்க 4 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.பிளஸ் 2 தேர்வுகள் வரும் 25ம் தேதி முடிகின்றன. அதை தொடர்ந்து 26ம் தேதியே 10ம் வகுப்பு பொது தேர்வு தொடங்குகிறது. தமிழகம் புதுச்சேரியை சேர்ந்த 6 ஆயிரம் பள்ளிகளில் இருந்து 10 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். 10ம் வகுப்பு பொது தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்குவது வழக்கம். இந்த ஆண்டு 9.15 மணிக்கு தேர்வுகள் தொடங்கி, 12 மணிக்கு முடிகிறது. பொது தேர்வுக்காக 3 ஆயிரம் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் 40 ஆயிரம் பேர் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். 

           இந்த ஆண்டு 10ம் வகுப்பு பொது தேர்வை கண்காணிக்க 4 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வில் முறைகேட்டில் ஈடுபடும் மாணவர்கள் 2 முதல் 5 ஆண்டுகள் தேர்வு எழுத தடை செய்யப்படும். விடைத்தாள் 30 பக்கம் கொண்ட ஒரே புத்தகமாக வழங்கப்படுகிறது. விடைத்தாளின் முகப்பில் தேர்வு எழுதும் மாணவரின் புகைப்படம், தேர்வு எண், பாடம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அச்சிட்டு வழங்கப்படும். மாணவர்கள் கையொப்பம் மட்டும் போட்டால் போதும்.விடைத்தாள் திருத்த வசதியாக முகப்பு பகுதியில் 3 பிரிவுகளில் பார்கோடு இருக்கும்.
 
               தேர்வு முடிந்து விடைத்தாளை திருப்பி கொடுத்ததும் மாணவர் விவரம் அடங்கிய பகுதியை கிழித்து எடுத்து விடுவர். பின்னர் டம்மி நம்பர் போட்டு தேர்வு தாள் திருத்தம் செய்வதற்கு அனுப்பப்படும். விடைத்தாளில் 28 மற்றும் 29ம் பக்கத்துக்கு இடையில் கிராப் ஷீட், வங்கியில் பணம் போடும், எடுக்கும் செல்லான், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் செல்லான், வரலாறு மற்றும் புவியியல் பாடத்துக்காக 2 இந்தியா மேப், 1 ஐரோப்பா, 1 ஆசியா மேப் என 4 மேப்கள் இணைக்கப்பட்டு வழங்கப்படும். தேர்வு எழுதுவதற்கு துணை தாள் வழங்கப்பட மாட்டாது.




1 Comments:

  1. theirvukku thunaithaal vazhangappadum

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive