லோக்சபா தேர்தலால், தமிழகத்தில், டி.என்.பி.எஸ்.சி., 'குரூப்- 1' தேர்வை
நடத்துவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், ஏப்., 24ல் லோக்சபா
தேர்தலுக்கான, ஓட்டுப்பதிவு நடக்கிறது.
ஏப்., 26ல், குரூப் - ! தேர்வு நடக்க உள்ளது. தேர்தல் பணிகளை கண்காணிப்பதற்காக, அமைக்கப்பட்ட குழுக்களில், வருவாய்த்துறை பணியாளர்கள், ஏராளமானோர் இடம்பெற்றுள்ளனர். ஓட்டுப்பதிவு முடிந்தாலும், ஏப்., 28 வரை, தேர்தல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. ஓட்டுப்பதிவு அலுவலர்களாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களே, குரூப் - 1 தேர்வு கண்காணிப்பாளர்களாகவும் நியமிக்கப்பட உள்ளனர். ஓட்டுப்பதிவு முடிந்து, ஒரு நாள்இடைவெளியில், குரூப்- 1 தேர்வு நடத்தப்படுவதால், அலுவலர்கள் தேர்வு பணிக்கு செல்வதில் சிரமம் ஏற்படும்.
இதனால், குரூப் - 1 தேர்வு நடத்துவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த, தேர்வு தேதியை மாற்றிமைக்க வலியுறுத்தி, வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர், டி.என்.பி.எஸ்.சி., செயலருக்கு மனு அனுப்பியுள்ளனர். துணை கலெக்டர், டி.எஸ்.பி., வணிக வரித்துறையில், துணை கமிஷனர், துணை பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி போன்ற பணியிடங்கள், குரூப் - 1 பணியிடங்களாக, தமிழகத்தில் கருதப்படுகின்றன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...