முதுகலை ஆசிரியர் வரலாறு பாடத்துக்கான தமிழ் வழி இடஒதுக்கீட்டுக்கானதிருத்தப்பட்ட புதிய பட்டியலை TRB வெளியிட்டுள்ளது.கடந்த 3 ஆம் தேதி 2011-12 ஆண்டுக்கான வரலாறு,வணிகவியல்,
பொருளாதர பாடத்துக்கான முதுகலை ஆசிரியர் தமிழ் வழி இடஒதுக்கீட்டுக்கான தேர்வர்கள் பட்டியலை டிஆர்பி வெளியிட்டது.
இதில் வரலாறு பாடத்துக்கான பட்டியலை மட்டும் டிஆர்பி வாபஸ் பெற்றதுஇதுகுறித்து டிஆர்பி தனது இணையதளத்தில் RESULT FOR TAMIL MEDIUM HISTORY IS WITHDRAWN FOR COMPUTER VERIFICATION. என தெரிவித்திருந்தது.
உரிய கட்-ஆப் மதிப்பெண்கள் பெற்ற சிலரது பெயர் விடுபட்டதே அதற்கு காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.எனவே அது சரிசெய்யப்பட்டு . தற்போது 35 பேரடங்கிய திருத்தப்பட்ட புதிய பட்டியலை TRB வெளியிட்டுள்ளது.இந்நிலையில் 2012 ல் தேர்ச்சிப்பெற்று காத்திருக்கும் தமிழ் வழி இட ஒதுக்கீட்டில் தேர்வுபெற்ற அனைவரும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக காத்திருக்கும் தங்களுக்கு அரசு விரைவில் பணி நியமனம் வழங்கவேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.தமிழ் வழி இடஒதுக்கீட்டுக்கான தேர்வர்கள் முதல்வர் பிறந்த நாளுக்குள் பணிநியமன ஆணை வழங்கப்படுமா என்று ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...