மாணவர்களின் எதிர்கால நலன்களுக்கு முக்கியத்துவம் அளித்து தமிழகஅரசு
செயல்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி
தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற நிதிநிலை அறிக்கை
மீதானவிவாதத்தில் பேசிய புதிய தமிழகம் கட்சியின் தலைவர்
டாக்டர்கிருஷ்ணசாமி, ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண்களில் எஸ்.சி.,
எஸ்.டி.,மாற்றுத் திறனாளிகள் மற்றும் சிறுபான்மையினர் பலன்பெறும்
வகையில்மேலும் சலுகை வழங்க வேண்டும் என்றார். அவருக்குப் பதிலளித்து
அமைச்சர் வீரமணி பேசியது: எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கையை ஏற்று ஆசிரியர்
தகுதித் தேர்வில்தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்களை இட ஒதுக்கீட்டுப்
பிரிவினருக்கு 60-லிருந்து 55 சதவீதமாக முதல்வர் ஜெயலலிதா குறைத்துள்ளார்.
இப்போது மேலும் மதிப்பெண் சலுகை வேண்டும் என்கிறார்கள்.
தகுதியானஆசிரியர்கள்இருந்தால்தான் ஆதிதிராவிடர்,
பழங்குடியினர்குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைக்கும். நமது காலம்
போய்விட்டது.குழந்தைகளில் எதிர்காலம் மிகவும் முக்கியமானது என்றார்.
what is next action for cv finished candidate ?
ReplyDeleteama pa
ReplyDelete