Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Teachers Strike - ன் போது பள்ளிகள் சுமூகமாக நடைபெற BRT-களை பயன்படுத்தி கொள்ள உத்தரவு

           தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்ககங்கள் மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நடைபெறவுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தின் போது பள்ளிகள் சுமுகமாக நடைபெற ஆசிரியர் பயிற்றுநர்களை பயன்படுத்தி கொள்ள உத்தரவு


       தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக சில கோரிக்கைகளை வலியுறுத்தி 26.02.2014 அன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். அதே போன்று தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டுக் குழுவில் (டிக்டோஜாக்) இணைந்துள்ள ஆசிரியர் சங்கங்களும் சில கோரிக்கைகளை வலியுறுத்தி 06.03.2014 அன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர்.

         எனவே 26.02.2014 மற்றும் 06.03.2014 ஆகிய வேலை நிறுத்த நாட்களில், பள்ளிகளில் ஆசிரியர் இல்லாத சூழல் உள்ளதால், அவ்வாறு ஆசிரியர் இல்லாத பள்ளிகளில், கற்றல், கற்பித்தல் பணிகள் தடையின்றி நடைபெறும் பொருட்டு, தங்கள் மாவட்டத்திலுள்ள வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கி அன்றைய நாளில் பள்ளி நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
           இந்நேர்வில் மேற்கொண்ட நடவடிக்கை குறித்த அறிக்கையினை விரைவில் அனுப்பி வைத்திட அறிவுறுத்தப்படுகிறது.
SSA, மாநில திட்ட இயக்குநர் அவர்கள் அறிவுறுத்தி உள்ளார்.




7 Comments:

  1. ஒரு ஆசிரியர் பயிற்றுநருக்கு 10 பள்ளிகள் என்று வைத்துக்கொள்ளலாம். அவருக்கு ஒதுக்கப்பட்ட 10 பள்ளிகளில் 5 பள்ளிகளில் ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டால் ஆசிரியர் பயிற்றுநர் எவ்வாறு இந்த 5 பள்ளிகளை கவனித்துக்கொள்ளமுடியும். இவ்வாறு ஒன்றிய அளவில் இது சாத்தியமா? மேலும் மாநில அளவில் ஆசிரியர் பயிற்றுநர்கள் இடம் பல காலியாக உள்ளது. சாத்தியமற்ற வேலைகள் செய்வதை விட்டுவிட்டு உறுப்படியான வேலையை கல்வித்துறை செய்தால் நலம். ஆசிரியர் இல்லாத இடங்களில் 11,12ஆம் வகுப்புகளுக்கு ஆசிரியர்களை நியமிக்காமல் ஆசிரியர் பயிற்றுநர்கள் கொண்டு வகுப்புகள் நடைபெற்றது போன்று கணக்கிற்கு வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம். ஏற்கனவே திறமை வாய்ந்த ஆசிரியர் பயிற்றுநர்களை பள்ளிக்கு அனுப்பாமல் அவர்களை அலைக்கழித்ததும் ஆசிரியர் பயிற்றுநர்கள் இல்லாத இடங்களுக்கு பந்தாடப்படுவதும் கல்வித்துறை நிறுத்திக்கொண்டால் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு நிம்மதி வரும்

    ReplyDelete
  2. 11th and 12th computer teachers ilamaley thaan padikiranga.ithula kudukura buildup a cs b.ed mudicha teachers appoinment panrathula kaatalam.teacher ilama students ku paathipu varama irukurathu BRT vachu manage panrangalam..enna oru nadipu...public exam elutha pora 12th students one year ah teachers ilama padichu exam elutha porangalam..2nal strike panrathula than students padipu kettu pogutham.enna oru kodumai sir.

    ReplyDelete
  3. sec grade சம்பளத்தை உயர்த்த போராடும் ஆசிரியர்களை ஒடுக்க பட்டதாரி பயிற்றுனரை பயன்படுத்துவது மகா கேவலமான செயல் அல்லவா

    ReplyDelete
  4. sec grade சம்பளத்தை உயர்த்த போராடும் ஆசிரியர்களை ஒடுக்க பட்டதாரி பயிற்றுனரை பயன்படுத்துவது மகா கேவலமான செயல் அல்லவா

    ReplyDelete
  5. இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஆசிரிய பயிற்றுனர்களுக்கும் விரோதம்தான் ஏற்படும்

    ReplyDelete
  6. All secondary grade teachers should support the strikes. Becase, if we miss to change the basic pay(PAY BAND) for secondary grade teachers it should be heavy loss in next pay commission also. SO COME TOGETHER TO SUPPORT!

    ReplyDelete
  7. dear muthulectumi . nithyia sister deeo exam padinga get deeo

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive