தமிழகத்தில் 1,851 பள்ளிகளில் புதிய வகுப்பறைகள்.
தமிழகத்தில் 1,851 பள்ளிகளில், புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில், மத்திய-மாநில அரசுகளின் பங்களிப்புடன் அரசு பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறைகள், ஆய்வுக்கூடங்கள் கட்டுவதற்கு, நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கடந்த 2010-11ல் பள்ளிதகவல் மேலாண்மை அறிக்கையின் படி, ஒவ்வொரு பள்ளிக்கும் தேவையான வகுப்பறைகள் கட்டுவதற்கு, அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இதன்படி, தமிழகத்தில் 1,851 உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் புதிய வகுப்பறைகள்; 698 ஆய்வகங்கள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.இதுவரை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மேற்பார்வையில், கட்டடங்கள் கட்டப்பட்டு வந்தன. இனி, "பொதுப் பணித்துறைக்கு நிதி வழங்கப்பட்டு, புதிய வகுப்பறைகள் கட்டப்படும்" என அனைவருக்கும் இடைநிலை கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...