ஆர்.எ ம்.எஸ்.ஏ.: தொகுப்பூதியத்தில் பணியாற்ற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்
புதுகை ஆர்.எ ம்.எஸ்.ஏ., திட்ட ஒருங்கிணை ப்பாளர் அலுவலகத்தில் காலியாக உள்ள 2 உதவி மேலாளர் மற்றும் 2 டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பணியிடத்துக்கு தொகு ப்பூதிய அடிப்படையில் பணியாற்ற விரும்பும் தகுதியுடைய நபர்கள்
விண்ணப்பிக்கலாம்.புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி
அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
புதுக்கோட்டை மாவட்ட அனைவருக்கும்
இடைநிலைக் கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தில் காலியாக உள்ள 2 உதவி மேலாளர் பணியிடங்கள் மற்றும் 2 டேட்டா என்ட்றி ஆப்ரேட்டர் பணியிடங்களில் தகுதியுடைய நபர்கள் தேர்வு
செய்யப்பட்டு தொகுப்பூதிய அடிப்படையில் பணியமர்த்தப்பட உள்ளனர்.
உதவி மேலாளர் பணிக்கு பட்டப்படிப்பு
மற்றும் டேலி ஈ.ஆர்.பி., தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்று பணியில் முன் அனுபவம்
உள்ளவர்களாக இருத்தல்வேண்டும். டேட்டா என்ட்றி ஆப்ரேட்டர் பணிக்கு பட்டப்படிப்பு
மற்றும் தமிழ், ஆங்கில் தட்டச்சு தெரிந்தவராகவும்,
பணியில் முன் அனுபவம் உள்ளவர்களாகவும்
இருத்தல்வேண்டும்.
விரும்புவோர் புதுகை சி.இ.ஓ., அலுவலகம் அருகில் உள்ள அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தை நேரில் தொடர்புகொண்டு இதற்கான விண்ணப்பத்தை பெறல ாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 24ம் தேதிக்குள் அதே அலுவலகத்தில் ஒப்படைக்கவேண்டும்.
WHEN YOU ARE APPOINMENT IE SPECIAL EDUCATOR IN RMSA
ReplyDelete