மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க
ஆசிரியர்களின் தேவையும் அதிகரித்து வருகிறது. மாணவர்கள் அனைவரும் ஒரே
மாதிரியான திறனோடு இருப்பதில்லை. ஒவ்வொருவருக்குமான தேவைகள் மாறுபட்டு
இருக்கிறது.
ஆசிரியப் பணி என்பதே ஒரு சேவைப்பணிதான்
என்றாலும், அதிலும் சிறப்பு வாய்ந்த ஆசிரியப் பணியானது
மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிரியப் பணி. எளிதாக பாடங்களை உள்வாங்கும்
திறன்வாய்ந்த மாணவர்களைக் காட்டிலும், மாற்றுத் திறன் கொண்ட மாணவர்களுக்கு
கற்றுக்கொடுப்பது மிகவும் சவாலான பணியாகும்.
தேவையான திறன்கள்
புதிய முறைகளை கண்டுகொண்டு கற்றுக்கொடுப்பதில் ஆர்வத்தை செலுத்துபவராக இருக்க வேண்டும்.
நன்கு கவனித்தல், புரிந்துகொள்ளுதல், பொறுமை ஆகிய குணநலன்கள் அவசியம்.
கட்டாயப்படுத்தி கற்றுக்கொடுப்பதை தவிர்த்து,
மாணவருக்குத் தேவையானதை உணர்ந்து, மாணவரின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்
வகையில் கற்றுக்கொடுக்க தயாராக இருக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு
மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி நிறுவனங்களில் ஆசிரியராகப் பணியாற்றலாம்.
பள்ளிகளில் ஆலோசகராகப் பணியாற்றலாம். போதுமான அனுபவத்திற்குப் பிறகு தனியாக கலந்தாலோசனை மையத்தை ஏற்பபடுத்தி செயல்படலாம்.
தேவையான கல்வித்தகுதி
இளநிலையில் உளவியல் படித்திருக்க வேண்டும்.
சான்றிதழ் படிப்புகளிலோ அல்லது பி.எட். மற்றும் எம்.எட். படிப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாடத்தை படித்திருப்பது சிறந்தது.
சிறந்த கல்வி நிறுவனங்களில் சில
மும்பை பல்கலைக்கழகம், மும்பை.
இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம்.
ஷ்ருஷ்டி சைல்டு டெவலெப்மென்ட் அன்ட் லேர்னிங் இன்ஸ்டிடீயூட், புது டில்லி.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...