பேச்சு வார்த்தையின் போது எழுத்துப் பூர்வமாக அரசு எந்த உறுதியும் தராததால் நர்சுகளின் போராட்டம் நேற்று ஐந்தாவது நாளாக நீடித்தது.
"தனியார் மருத்துவ கல்லூரிகளில் நர்ஸ் பட்டயப்
படிப்பு முடித்தவர்களையும் அரசுப் பணியில் சேர்க்க வேண்டும். அதற்கு
போட்டித் தேர்வு நடத்த வேண்டும்" என சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில்
உத்தரவிட்டது. இதற்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் படித்து வரும் நர்சுகள்
கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கடந்த நான்கு நாட்களாக தமிழகம் முழுவதும்
போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக, கோட்டையில் நேற்று, அமைச்சர்
விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது.
இதில் உடன்பாடு ஏற்படாததால், நர்சுகளின் போராட்டம், ஐந்தாவது நாளாக
நீடித்தது.
இதுபற்றி, போராட்டத்தில் ஈடுபட்டு வரும்
மாணவியர் கூறுகையில், "பேச்சு வார்த்தையின் போது, எழுத்துப் பூர்வமாக எந்த
உத்தரவாதத்தையும் அரசு தரவில்லை. அதனால், போராட்டத்தை நீடிப்பது என முடிவு
செய்துள்ளோம்" என்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...