பொதுத் தேர்வு நேரத்தில் விடுப்பில் சென்ற ஆசிரியர்கள் உடனடியாக பணிக்கு திரும்பவேண்டும் என்றும் இல்லையேல் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தியாகராஜன் எச்சரிக்கை விடுத்தார்.
சிகரத்தை நோக்கி
புதுவை மாநிலம் பாகூர் பாரதி அரசு மேல்நிலைப்பள்ளியில் கல்வி துறை சார்பில் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு சிகரத்தை நோக்கி என்ற தலைப்பில் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் வல்லவன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். பாரதி அரசு மேல்நிலைப்பள்ளி முதல்வர் கோமதி முன்னிலை வகித்தார். முதன்மை கல்வி அதிகாரி கலைச்செல்வன் வரவேற்றார்.
அமைச்சர் தியாகராஜன், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கல்வி வழிகாட்டி கையேட்டை வெளியிட்டு பேசினார். நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேல் நன்றி கூறினார்.
பேட்டி
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அமைச்சர் தியாகராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேர்வு நேரத்தில் ஆசிரியர்கள் தொடர் விடுப்பு எடுப்பது, தவறானது. விடுப்பில் சென்றவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். அவ்வாறு வரவில்லை என்றால் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி நேரத்தில் ஆசிரியர்கள் பணியில் இருக்கிறார்களா? குறித்த நேரத்தில் வேலைக்கு வருகிறார்களா? என்பதை கல்வி துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி கண்காணிப்பார்கள்.
ஆசிரியர்கள் பற்றாக்குறையை போக்க, புதிதாக ஆசிரியர்களை பணியில் அமர்த்த ஒப்புதல் கேட்டு மத்திய அரசுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு கோப்புகள் அனுப்பப்பட்டது. ஆனால் இதுவரை ஒப்புதல் கிடைக்கவில்லை.
பால் தட்டுப்பாடு புதுவையில் பால் தட்டுப்பாடு இருந்து வருவதால், பள்ளிகளில் காலையில் வழங்கப்படும் ரொட்டி-பால் திட்டம் நிறுத்தப்பட்டு உள்ளது. மேலும் வாரந்தோறும் இரண்டு முறை சத்துணவில் முட்டை வழங்கப்பட வேண்டும். ஆனால் ஒருமுறைதான் முட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்த குறைபாட்டை போக்க முதல்-அமைச்சரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் தியாகராஜன் கூறினார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...