"ஒன்றிய அளவிலான, தொடக்க, நடுநிலைப் பள்ளி
ஆசிரியர்களின் விபரங்களை ஆன்-லைனில் பதிவேற்றம் செய்வதை அந்தந்த
பள்ளிகளிடம் ஒப்படைக்கக் கூடாது என தொடக்க கல்வி இயக்குனரகம்
உத்தரவிட்டுள்ளது.
"ஒன்றிய அளவில் தொடக்க மற்றும் நடுநிலை
பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின், 25 வகையான விபரம், உதவி தொடக்க
கல்வி அலுவலகத்தில் செயல்படும் கல்வி தகவல் மேலாண்மை முறை (இ.எம்.ஐ.எஸ்.,)
மூலம் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதை உள்ளீடு செய்யும்
அதிகாரம், அந்தந்த உதவி தொடக்க கல்வி அலுவலகத்துக்கு, மட்டுமே உள்ளது.
ஆசிரியர்களால் அளிக்கப்படும் விபரங்கள், உதவி
கல்வி அலுவலகத்தில் பராமரிக்கப்படும், ஆசிரியர்களின் பணிப் பதிவேட்டுடன்,
சரிபார்த்த பின்னரே, இணையதளத்தில் உள்ளீடு செய்ய வேண்டும். ஆனால், சில
ஒன்றியங்களில், துவக்க மற்றும் நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு,
நேரடியாக உதவி கல்வி அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள, "யூசர் ஐ.டி.,
பாஸ்வேர்டு" வழங்கப்பட்டு, அப்பள்ளியில் பணிபுரியும், ஆசிரியர்களின்
விபரங்கள், இணையதளத்தில் உள்ளீடு செய்யப்படுகிறது.
இதுகுறித்து தொடக்க கல்வி இயக்குனரகத்துக்கு,
பல்வேறு தரப்பில் புகார் சென்றது. இதையடுத்து, தொடக்க கல்வி இயக்குனரகம்
சார்பில், மாவட்ட தொடக்க கல்வி அலுவலருக்கு அனுப்பியுள்ள உத்தரவில், "தேசிய
தகவல் மையத்தால், உதவி தொடக்க கல்வி அலுவலகங்கள் மட்டுமே, பயன்படுத்தும்
வகையில், மென்பொருள் கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. பள்ளி தலைமை
ஆசிரியர்கள், நேரடியாக அப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் விபரங்களை
இணையதளத்தில் உள்ளீடு செய்தல் கூடாது. ஒன்றிய அளவில் செயல்படும்
"இ.எம்.ஐ.எஸ்" குழுக்கள் மூலம், மட்டுமே மேற்கொள்ள வேண்டும்" என
கூறப்பட்டுள்ளது.
Thanks to DEE.
ReplyDeleteThanks to DEE.
ReplyDeleteIYAKKUNARUKKU NANRI.BUT ANTHA EMIS KUZHUKKALIL IRUPPAVARKAL YAR YAR? AVRKALUM AASIRYARKAL ENRAL?
ReplyDelete