தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான பிளஸ்2
பொதுத் தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்குகிறது. பிராக்டிக்கல் தேர்வு
அனைத்து பள்ளிகளிலும் கடந்த வாரத்துடன் நடத்தி முடிக்கப்பட்டு விட்டன.
நடப்பு கல்வி ஆண்டில் தேர்வு நடைமுறையில் பல்வேறு மாற்றங்கள்
செய்யப்பட்டுள்ளது.
புக்லெட் வடிவில் 40
பக்கங்களைக் கொண்டதாக விடைத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு
தேவையான விடைத்தாள், மாணவர்களின் விவரம் அடங்கிய மேல்தாள், கிராப்ட் ஷீட்,
மற்றும் வரைபடம் உள்ளிட்டவை மற்றும் தேர்வுக்கு தேவையான பொருட்கள் தேர்வு
மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
விடைத்தாள்களுக்குள் வித்தியாசம் வந்துவிடாதபடி டெய்லர்களை அமர்த்தி, 16ம் எண் ஊசி மூலம் வெள்ளை நூலில் ஒரு அங்குலத்திற்கு 6 தையல்கள் விழுமாறு, டாப் ஷீட்டுடன் விடைத்தாள்களை தைக்குமாறு தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேல் தாள் கிழிந்துவிட்டால் கல்வித்துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு மீண்டும் மேல் தாளை பெற்றுக் கொள்ளலாம். மொத்தம் 40 பக்கங்கள் கொண்ட விடைத்தாளில் மேல் தாள் மதிப்பெண் குறிப்பிடுவதற்கான பட்டியல் போக மீதமுள்ள 36 பக்கங்களில் மாணவர்கள் தேர்வு எழுத முடியும். தேர்வுக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் பல்வேறு பள்ளிகளும் சிறப்பு வகுப்புகள் நடத்தி, மாணவர்களை தயார்படுத்தி வருகின்றன.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...