Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு; ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் அறிவிப்பு

           ஆசிரியர் தகுதி தேர்வில் புதிதாக தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு உண்டு. இதற்கான அறிவிப்பு விரைவில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் அறிவிக்கப்படுகிறது. ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற முன்பு 150 மதிப்பெண்ணுக்கு 90 மதிப்பெண் பெற வேண்டும். இது 60 சதவீதம். அதை முதல்–அமைச்சர் ஜெயலலிதா தளர்த்தி, தேர்ச்சி சதவீதத்தை 55 சதவீதமாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து தேர்ச்சி மதிப்பெண்ணை 82 ஆகநிர்ணயித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா அறிவித்தார்.


           ஏற்கனவே ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு உள்ளது. இப்போது தேர்ச்சி மதிப்பெண் 82 என்று அறிவித்ததால் புதிதாக 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற வாய்ப்பு உள்ளது. அதனால் அவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்களா?அவர்களுக்கு வேலை உண்டா? என்ற கேள்வி புதிதாக தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் எழுந்துள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு :–
           தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல் உண்டு.சான்றிதழ் சரிபார்க்க ஆசிரியர் தகுதி தேர்வில் புதிதாக தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும். ஆசிரியர் தகுதி தேர்வில் எடுத்த மதிப்பெண், மேலும் அவர்கள் பொதுத்தேர்வு மற்றும் ஆசிரியர் பயிற்சியில் எடுத்த மதிப்பெண்களும் கணக்கில் எடுத்துக்கொண்டு பின்னர் தான் ஆசிரியர் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய, இறுதி பட்டியல் தயாரிக்கப்படும்.ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றதால், ஆசிரியர் வேலை கிடைக்கும் என்று யாரும் நம்பக்கூடாது.சான்றிதழ் சரிபார்க்க பின்னர் அழைப்பு அனுப்பப்படும்.
இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.




14 Comments:

  1. Quick a cv mudichu oru result sollunga sir.naanga atutha exam ku padikanum illa.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. please contact tntet 2012 82-89 candidate for further action cell 9842366268 email : saravanan01975@gmail.com government consider it .

    ReplyDelete
  6. rajkumar 7708444492 tntet 2012-89marks

    ReplyDelete
  7. gurumoorthy 9698854575 2012 89 in 2012

    ReplyDelete
  8. New G.O 29 released just now. For TET marks 55% to belwo 60% - 36 marks
    Vijay Chennai.

    ReplyDelete
  9. physics wgt 75 kedaikuma vevaram therinjavanga sollunga plz

    ReplyDelete
  10. physics wgt 75 kedaikuma vevaram therinjavanga sollunga plz

    ReplyDelete
  11. hai vijay, neenga solvadhu unmaithana, pls reply

    ReplyDelete
  12. New G.O 29 released just now. For TET marks 55% to belwo 60% - 36 marks conform news see the www.tn.gov.in

    By Senthil Kumar C, Krishnagiri

    ReplyDelete
  13. New G.O 29 released just now. For TET marks 55% to belwo 60% - 36 marks conform news see the www.tn.gov.in GO's Public intrest to school education department

    By Senthil Kumar C, Krishnagiri

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive