Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாவட்டக் கல்வி அதிகாரி தேர்வில் மீண்டும் மாற்றம் முதன்மைத் தேர்வில் கல்வியியல் பாடம் நீக்கம்.


           பள்ளிக்கல்வித் துறையில் மாவட்டக் கல்வி அதிகாரி (டி.இ.ஓ.) பணியிடங்கள்75 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும், 25 சதவீதம் நேரடித் தேர்வு மூலமாகவும் நிரப்பப்படுகின்றன.
 
                 பதவி உயர்வில் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 40 சதவீத இடங்களும், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 35 சதவீத இடங்களும் ஒதுக்கப்படுகின்றன.

            நேரடி டி.இ.ஓ. தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தி வருகிறது. முன்பு நேரடி டி.இ.ஓ. நியமனத்துக்கு ஒரேயொரு தேர்வுதான் நடத்தப்பட்டு வந்தது. இதில், விண்ணப்பதாரர்கள் படித்த பட்ட மேற்படிப்பில் கொள்குறி வகையில் (ஆப்ஜெக்டிவ்) 200 கேள்விகள் கேட்கப்படும். 300 மதிப்பெண் கொண்ட இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு அடுத்து நேர்முகத் தேர்வு நடத்துவார்கள். இதற்கு 40 மதிப்பெண்.தேர்வு முறையில் மாற்றம்பின்னர் எழுத்துத் தேர்வு, நேர்காணல் மதிப்பெண் சேர்த்து (340) அதன் அடிப்படையில் கட் ஆப் மார்க் தயாரிக்கப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள். கடந்த ஆண்டு டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறையில் அதிரடி மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. பாடத் திட்டங்கள் மாற்றியமைக்கப் பட்டன. அப்போது டி.இ.ஓ. தேர்வு முறையிலும் மாற்றம் கொண்டுவந்தனர்.

          குரூப்-1 தேர்வைப் போன்று டி.இ.ஓ. தேர்வுக்கும் முதல்நிலைத் தேர்வு, முதன்மை எழுத்துத் தேர்வு, நேர்காணல் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன.அதில் முதல்நிலைத் தேர்வில் பொது அறிவு மற்றும் நுண்ணறிவுத் திறன் கேள்விகள் சேர்க்கப் பட்டன. முதன்மை தேர்வில் 3 தாள்களை கொண்டுவந்தனர். முதல் இரு தாள்களில் பொது அறிவு பகுதியில் இருந்து கேட்கப்படும் வினாக்களுக்கு விரிவாக பதில் எழுத வேண்டும். அதேபோல், 3-வது தாளில் கல்வியியல் பாடத்தில் இருந்து ஆப்ஜெக்டிவ் முறையில் 200 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.இந்த நிலையில், டி.இ.ஓ. தேர்வில் மீண்டும் மாற்றம் கொண்டுவரப்பட்டு இருக்கிறது. முதன்மைத் தேர்வில் 3-வது தாள் நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக விண்ணப்பதாரர்களின் பட்ட மேற்படிப்பு பாடத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பொது அறிவைப் போல விரிவாக பதில் எழுத வேண்டும். முதல்நிலைத் தேர்வு, நேர்முகத்தேர்வு மதிப்பெண்ணில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

           11 காலியிடங்களை நிரப்ப தேர்வு தற்போது 11 காலிப்பணி யிடங்களை நிரப்ப அறிவிக்கப் பட்டுள்ள டி.இ.ஓ. தேர்வில் இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்கான முதல்நிலைத் தேர்வு ஜூன் 8-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்வு எழுத விரும்பும் முதுகலை பட்டதாரிகள்மார்ச் 12-ம் தேதிக்குள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தின் (www.tnpsc.gov.in) மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.




11 Comments:

  1. dear friends come share panni padikalam

    ReplyDelete
  2. Priya Madam i agree with u.. do you have materials..? Naam share panni padikalam

    ReplyDelete
  3. Priya Madam i agree with u.. do you have materials..? Naam share panni padikalam

    ReplyDelete
  4. Priya Madam i agree with u.. do you have materials..? Naam share panni padikalam

    ReplyDelete
  5. Priya Madam i agree with u.. do you have materials..? Naam share panni padikalam

    ReplyDelete
  6. Priya Madam i agree with u.. do you have materials..? Naam share panni padikalam

    ReplyDelete
  7. Priya Madam i agree with u.. do you have materials..? Naam share panni padikalam

    ReplyDelete
  8. Priya Madam i agree with u.. do you have materials..? Naam share panni padikalam

    ReplyDelete
  9. Priya Madam i agree with u.. do you have materials..? Naam share panni padikalam

    ReplyDelete
  10. Priya Madam i agree with u.. do you have materials..? Naam share panni padikalam

    ReplyDelete
  11. can computer science teacher
    can write

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive