அமெரிக்காவின் லாங்வுட் பல்கலையில் நடந்த
அறிவியல் உச்சி மாநாட்டில், தமிழகத்தை சேர்ந்த மாணவர் டெனித் ஆதித்யாவின்
கண்டுபிடிப்பு குறித்து விவாதம் நடந்தது. மாநாட்டாளர்களின் கேள்விகளுக்கு,
அம்மாணவர், "டெலி கான்பரன்சிங்' மூலமாக விளக்கம் கொடுத்தார்.
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு பிளஸ் 1
மாணவர் டெனித்ஆதித்யா,16. தொடர்ந்து பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளை
கண்டுபிடித்து வருகிறார் இவர், கடந்த இரண்டு ஆண்டிற்கு முன்,
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் கப், பிளேட், கேரிபேக்
போன்றவைகளுக்கு மாற்றாக, வாழை இலையிலான கப், பிளேட், பை போன்றவைகளை தயார்
செய்வதற்கு, வாழை இலையை பதப்படுத்தி பல ஆண்டு உபயோகிக்கும் தொழில்நுட்பத்தை
கண்டுபிடித்தார். இதற்காக, பல்வேறு மாநில விருதுகளையும், மத்திய அரசின்
தங்கப்பதக்கம், விருது பெற்றுள்ளார். தனது கண்டுபிடிப்பிற்காக, காப்புரிமை
பெற விண்ணப்பித்துள்ளார். மே மாதம் அமெரிக்காவில் நடைபெறவுள்ள சர்வதேச
அறிவியல் மாநாட்டில்,
இந்தியாவிற்கான கண்டுபிடிப்பை சமர்ப்பிக்க
தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், அமெரிக்காவின் வர்ஜீனியா
மாகாணத்தில் உள்ள, லாங்வுட் பல்கலைக்கழகத்தின், ஏழாவது ஆண்டு அறிவியல்,
தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் கற்கும் உச்சிமாநாடு நடந்தது. அதன்
இயக்குனர் மனோரமா நிகழ்ச்சியை துவக்கினார். கல்வித் துறையின் டீன்
பால்சாப்மேன் தலைமை வகித்தார். அமெரிக் காவில் உள்ள கல்வித்துறை
நிபுணர்கள், கல்லூரி பேராசிரியர்கள், கிராமப்புற மேல்நிலை,
துவக்கப்பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில், முதலாவதாக
இந்தியாவின் சார்பில் தமிழக மாணவர் டெனித் ஆதித்யாவின், வாழை இலை
பதப்படுத்தும் தொழில்நுட்பம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இது
குறித்து மாநாட்டில் டிஜிட்டல் டிஸ்பிளே போர்டில் அனைவ ருக்கும் விவரித்து
காட்டப்பட்டது. மாநாட்டாளர்களின் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும்
டெனித் ஆதித்யா, திருவனந்தபுரத்தில் இருந்து, "டெலிகான்பரன்சிங்' மூலம்
பதிலளித்தும், தனது கண்டுபிடிப்பின் பயன்கள் குறித்தும் விவரித்து
பேசினார். இதனால் மகிழ்ச்சியடைந்த அவர்கள், அடுத்த உச்சி மாநாட்டின்போது,
நேரில் வந்து கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தனர். இவரைப்போல,
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் இன்ஜினியர் ஜாபர்அலியின் "மேத்டிஸ்க்' கணித
உபகரணம் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
Congrats Brother
ReplyDeleteTamilan endru sollada thalai nimirndhu nillada
ReplyDeleteTamilan endru sollada thalai nimirndhu nillada
ReplyDeleteVery good. All the Best ADITHYA.
ReplyDelete