யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யு.பி.எஸ்.சி.,) சார்பாக இந்தியன்
எக்கனாமிக் சர்வீஸஸ்/இந்தியன் ஸ்டாடிஸ்டிகல் சர்வீஸஸ் 2014 பொது எழுத்துத்
தேர்வை நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தேவைகள்: அங்கீகரிக்கப்பட்ட
பல்கலைக் கழகத்தின் மூலமாக பொருளாதாரம், அப்ளைடு எக்கனாமிக்ஸ், பிஸினஸ்
எக்கனாமிக்ஸ், எக்கனாமெட்ரிக்ஸ் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் முது நிலைப்
பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். இவர்கள் எக்கனாமிக் சர்வீசஸ்
தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும். அதே போல் ஸ்டாடிஸ்டிகல் சர்வீஸஸ்
பிரிவுக்கு விண்ணப்பிக்க இள நிலைப் பட்டப் படிப்பில் புள்ளியியல்,
மேதமேடிகல் ஸ்டாடிஸ்டிக்ஸ், அப்ளைடு ஸ்டாடிஸ்டிக்ஸ் ஆகிய ஏதாவது ஒன்றை ஒரு
பாடமாகவோ அல்லது இதே பிரிவுகளில் ஏதாவது ஒன்றில் முது நிலைப் பட்டப்
படிப்பையோ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.200.
தேர்வு மையங்கள்: யு.பி.எஸ்.சி.,யின்
இந்த பொது எழுத்துத் தேர்வு தமிழ் நாட்டில் சென்னை உள்ளிட்ட நமது அண்டை மா
நில மையங்களான பெங்களூரு மற்றும் திருவனந்தபுரம் போன்ற ஏதாவது ஒரு
மையத்தில் 24.05.2014 அன்று நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: இந்தியன்
எக்கனாமிக் சர்வீஸஸ்/ இந்தியன் ஸ்டாடிஸ்டிகல் சர்வீஸஸிற்கான பொது
எழுத்துத் தேர்வுக்கு ஆன்-லைன் முறையிலேயே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க
வேண்டும்
விண்ணப்பிக்க இறுதி நாள்: 10.03.2014
இணையதள முகவரி: www.upsconline.nic.in/mainmenu2.php
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...