தமிழகத்தில், தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள்
ஒட்டுமொத்தமாக விடுப்பு எடுக்கும் போராட்டத்தை, 'பிசுபிசுக்க' வைக்க,
ஆசிரியர் பயிற்றுனர்கள் பாடம் நடத்த, கல்வித்துறை அதிகாரிகள் முடிவு
செய்துள்ளனர்.
மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம், புதிய
ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது உட்பட பல்வேறு
கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி
ஆசிரியர் கூட்டணி சார்பில், பிப்., 26ல் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு
எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பிப்.,25ல் உள்ளிருப்புப்
போராட்டமும் நடக்கிறது.
ஒரே நாளில் 60 ஆயிரம் ஆசிரியர்கள் வரை விடுப்பு
எடுப்பதால், பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இதைத்
தவிர்க்கும் வகையில், அனைவருக்கும் கல்வித் திட்டத்தில், பணியாற்றும்
ஆசிரியர் பயிற்றுனர்கள் மூலம்(பி.ஆர்.டி.,), பிப்.,25 மற்றும் 26ல்,
தொடக்கப் பள்ளிகளில் பாடம் நடத்த கல்வி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...