Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தகுதித்தேர்வு மதிப்பெண் சலுகை ரத்து செய்யக் கோரி வழக்கு ஐகோர்ட் நோட்டீஸ்


       ஆசிரியர் தகுதித் தேர்வு 2013 ல் பங்கேற்றவர்களுக்கு, 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கிய உத்தரவை, ரத்து செய்யக் கோரிய வழக்கில், டி.ஆர். பி., தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐேகார்ட் கிளை உத்தரவிட்டது.

திருச்சி தென்னுார் வின்சென்ட் தாக்கல் செய்த மனு:
ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) சார்பில், 2012 ஜூலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடந்தது. நான் பங்கேற்றேன். மொத்தம் 3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். 2012 அக்டோபரில் நடந்த தேர்வில், 11 சதவீதம் பேர் தேர்ச்சியைடந்தனர். பொதுப் பிரிவினரைத் தவிர, மற்றசமூகத்தினருக்கு, தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கி, தமிழக அரசு பிப்.,6 ல் உத்தரவிட்டது. இது, 2013 ல் தகுதித் தேர்வில் பங்கேற்றவர்களுக்கு மட்டும் பொருந்தும். இது ஒருதலைபபட்சமானது. நான் பிற்பட்ட வகுப்பினர். எனக்கு, 83 சதவீத மதிப்பெண் கிடைத்தது. எனக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கினால், தேர்ச்சியைடந்து விடுவேன். மதிப்பெண் சலுகை வழங்கிய, அரசின் உத்தரவை ரத்து செய்யவேண்டும். 2012 ல் தகுதித் தேர்வில் பங்கேற்றவர்களுக்கும், 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்க உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார். நீதிபதி எம்.எம்.சுந்தேரஸ் முன், விசாரைணக்கு மனு வந்தது. மனுதாரர் வக்கீல் வி.பன்னீர்செல்வம் ஆஜரானார். பள்ளிக் கல்வித்துறை செயலாளர், டி.ஆர்.பி., தலைவர், துவக்கக் கல்வி இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை 8 வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.




4 Comments:

  1. please contact tet2012 82-89 mark candidates for further action cell 9842366268

    ReplyDelete
  2. what is next action for cv finished candidate ?

    ReplyDelete
  3. 5% mark relaxation announced by Govt. For TET 2013 after declaring the results is unjustice.

    ReplyDelete
  4. why trb hesitate to announce the subject wise candidate results for TET 2013 exam ?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive