தேர்தலின் போது தான் பொதுமக்கள் தான் அடிப்படை வசதி கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள். தேர்தல் புறக்கணிப்பு என்று கொடிபுடிப்பார்கள்.
இதற்கு அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களும் விதிவிலக்கல்ல.
கடந்த 5ம் தேதி
மத்திய அரசுக்கு இணையான ஊதியம் கோரி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை
ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 12ம் தேதி சத்துணவு ஊழியர்கள்,
அங்கன்வாடி பணியாளர்கள் ஊதிய உயர்வு கோரி தடையை மீறி கலெக்டர்
அலுவலகங்களில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
13ம் தேதி பட்டதாரி
ஆசிரியர்களை பாதிக்கும் அரசு ஆணை எண்.720ஐ கைவிட வேண்டும் என வலியுறுத்தி
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் முதன்மைக்
கல்வி அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதுகுறித்து நிர்வாகிகள் சிலர் கூறுகையில்,
‘‘தேர்தலுக்கு முன்பு குரலை உயர்த்தினால் தான் அறிவிப்புகள் கிடைக்கும்.
கோரிக்கைகள் நிறைவேறும். அரசியல் கட்ச¤களின் தேர்தல் அறிக்கையிலும் எங்கள்
வேண்டுகோள் இடம் பெறும். மற்ற நேரங்களில் நடத்தும் போராட்டத்திற்கு எந்த
பலனும் இல்லை. கிணற்றில் போட்ட கல்லாகி விடுகிறது. அதற்காக தான்
தேர்தலுக்கு முன்பு கொடி பிடிக்கிறோம்’’ என்றனர்.
unmai than.......
ReplyDelete