Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மத்திய அரசின் நவோதயா பள்ளிகளில் ஆசிரியர் பணி

 
             இந்திய அரசின் மனித வளத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நவோதயா வித்யாலயா சமிதி பள்ளிகளில் காலியாக உள்ள 937 இளநிலை மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறைவாரியான முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலியிடங்கள் விவரம்:
01. உயிரியல் - 41 (பொது- 19, ஒபிசி- 9, எஸ்சி- 13).
02. வேதியியல் - 51 (பொது- 20, ஒபிசி- 10, எஸ்சி- 6, எஸ்டி- 15).
03. வணிகவியல் - 25 (பொது- 8, ஒபிசி- 8, எஸ்சி- 5, எஸ்டி- 4).
04. பொருளியல் - 76 (பொது- 25, ஒபிசி- 12, எஸ்சி- 29, எஸ்டி- 10).
05. ஆங்கிலம் - 53  (பொது- 40, எஸ்சி- 5, எஸ்டி- 8).
06. புவியியல் -33 (பொது- 17, ஒபிசி- 6, எஸ்சி- 6, எஸ்டி- 4).
07. இந்தி -51 (பொது- 37, எஸ்சி- 6, எஸ்டி- 8).
08. வரலாறு - 41 (பொது- 31, எஸ்சி- 8, எஸ்டி- 2).
09. கணிதம் - 84 (பொது- 14, ஒபிசி- 19, எஸ்சி- 27, எஸ்டி- 24).
10. இயற்பியல் - 59 (பொது- 24, ஒபிசி- 10, எஸ்சி- 6, எஸ்டி- 19).

கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அத்துடன் பி.எட்., பட்டமும் பெற்றிருக்க வேண்டும். இந்தி மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக பயிற்றுவிக்கும் திறன் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300- 34,800 மற்றும் தர ஊதியம் 4,800.
வயதுவரம்பு: 31.01.2014 தேதியின்படி 40க்குள். இருக்க வேண்டும்.

பட்டதாரி ஆசிரியர் காலியிடங்கள் விவரம்:
01. ஆங்கிலம் - 88  (பொது- 32, ஒபிசி- 10, எஸ்சி- 13, எஸ்டி- 33).
02. இந்தி - 65 (பொது- 45, எஸ்சி- 12, எஸ்டி- 8).
03. கணிதம் - 179 (பொது- 62, ஒபிசி- 15, எஸ்சி- 45, எஸ்டி- 57).
04. அறிவியல் - 53 (பொது- 25, ஒபிசி- 1, எஸ்சி- 7, எஸ்டி- 20).
05. சோஷியல் ஸ்டடீஸ் - 38 (பொது- 26, ஒபிசி- 1, எஸ்சி- 4, எஸ்டி- 7).

கல்வித்தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் சம்பந்தப்பட்ட துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட துறையில் பி.எட். பட்டம் பெற்றிருப்பதுடன் மத்திய அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம் மற்றும் இந்தி அல்லது சம்பந்தப்பட்ட மாநில மொழிகளில் பயிற்றுவிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 31.1.2014 தேதியின்படி வயது வரம்பு கணக்கிடப்படும்.
எஸ்சி., எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்களும் தளர்வு அளிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: அகில இந்திய அளவில் நடைபெறும் தகுதித்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்ப்பட்டு நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டுவார்கள்.  நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள செலானை பதிவிறக்கம் செய்து யூனியன் பாங்க் ஆப் இந்தியா கிளையில் பணமாக செலுத்த வேண்டும். எஸ்சி., எஸ்டி மறஅறும் மாற்றுத்திறனாளிகள், பெண்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.navodaya.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி: 27.04.2014.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.02.2014.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.navodaya.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive